சிங்கள
மாணவர்கள் தமிழ் மொழியையும், தமிழ்
முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழியையும் நன்கு
கற்பதன் மூலம் நாட்டில் ஏற்டுகின்ற
இன, மத, மொழி பிரச்சினைகளுக்கு
இலகுவான தீர்வுகளை கண்டு கொள்ள முடியும்
என அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற
உறுப்பினருமான எம்.எச்.எம்.
நவவி தெரிவித்தார்.
புத்தளம்
காஸிம் வீதியில் இயங்கும் அல் முஹ்பாத் முன்பள்ளியின்
22 வது வருட நிறைவும், வருடாந்த
கலை விழா நிகழ்வும்
சனிக்கிழமை (05) மாலை புத்தளம் நகர
மண்டபத்தில் நடைபெற்ற
போது அங்கு பிரதம அதிதியாக
கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்பள்ளி
பணிப்பாளர் திருமதி.லரீபா
சுஹைல் தலைமையில்
நடைபெற்ற
இந்த நிகழ்வில் 100 க்கும்
மேற்பட்ட மாணவர்கள் தமது திறமைகளை அரங்கேற்றினர்.
நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.எச்.எம்.
நவவி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்-
எதிர்காலத்தில் ஒரு திறமை மிகு
கல்வி சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின் ஆரம்பக்கல்வி பலம்
மிக்கதாக அமைதல் வேண்டும். அத்தகைய
பலம் மிக்க ஆரம்ப கல்வியையே
இன்று முன்பள்ளிகள் வழங்கி வருகின்றன.
ஆரம்ப பாடசாலைகளில் சிங்கள மொழிக்கு முக்கியத்துவம்
அளிக்கப்படுவது வரவேற்கத்தக்க ஒன்று. நமது சமூகத்தினர்
தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதில் சிங்கள மொழி சித்தி
இல்லாமை பெரும் தடங்களாக இருந்து
வருகிறது. எனவே சகோதர சிங்கள
மொழியை அனைவரும் ஆர்வத்துடன் பயில முன்வரவேண்டும் எனக்கூறினார்.