Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, November 5, 2016

புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்



புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தினருக்கும் , வடபுல நியுஸ் நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு புத்தளம் தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியில் இடம்பெற்றது.
புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர் சார்பில் அதன் செயலாளர் எச்.எம்.எம்.சபீக் தலைமையிலான உறுப்பினர்களான எஸ்.ஆர்.எம்.முஹ்சி,  முஹம்மது நசீர், முஹம்மது பதீன் (ஆசிரியர்) ஆகியோரும், வடபுல நியுஸ் நிர்வாகம் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் அஷ்ரப் முபாரக் (ரஷாதி) தலைமையிலான ரஸீன் ரஸ்மின், ரிபாஸ் நசீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புத்தளம் வைத்தியசாலையில் பிள்ளைப் பேறு வார்ட்டில் காணப்படும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு கவனம் செலுத்துமாறு புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர் வடபுல நியுஸ் நிர்வாகத்தினரைக் கேட்டுக்கொண்டனர்.
புத்தளம் வைத்தியசாலையில் பிள்ளைப்பேறு வார்ட்டில் காணப்படும் இடப்பற்றாக்குறையினால் கர்ப்பிணி தாய்மார்கள் பல சிரமங்களை எதிர்நோர்க்கி வருகின்றனர்.
புத்தளம் வைத்திய சாலையைப் பொறுத்தவரை சகல இன மக்களும் சேவைகளை பெற்றுக் கொள்கிறார்கள்.மகப்பேறு வார்ட்டில்  இடப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறான நிலைமை ஏற்படுவது  தவிர்க்க முடியாததொன்றாகும்.
புத்தளம் வைத்தியசாலையில் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர்கள் இரண்டு பேர் உள்ளனர்.இதனால் பிள்ளைப் பேறுக்காக இவ்வைத்தியசாலையில் பலர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
புத்தளம் வைத்தியசாலையில் குறைந்தபட்சம் ஒரு மாதம் 600 குழந்தைகள் சராசரியாக பிறக்கின்றார்கள்.
எனவே, புத்தளம் தள வைத்தியசாலையில் உள்ள பிள்ளை பேறு வார்ட்டில் காணப்படும் இடப்பற்றாக்குறை தொடர்பில் புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் அமைச்சர் றிஷாட் பதியுதீன்,  சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம், பாராளுமன்ற உறுப்பினர் நவாவி உள்ளிட்டோர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று அதுதொடர்பில் கோரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது.
எனினும்,  எதிர்வரும்  2017 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொடுப்பதாக  வாக்குறுதியளித்துள்ளனர்.
அதுமட்டுமன்றி, பணம் படைத்தவர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என எல்லோரும் தங்களால் முடியுமான  உதவிகளை செய்தால் புத்தளம் வைத்தியசாலையில் பிள்ளைப்பேறு வார்ட்டிற்காக 100 தர 40 கொண்ட கட்டடம் ஒன்றை அமைப்பக்க முடியும் என நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு, 100 தர 40 கொண்ட கட்டடம் ஒன்றை அமைக்க 1 கோடி 80 இலட்சம் ரூபா தேவைப்படும் என  மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதன்போது, வெளிநாடுகளில் வாழுகின்ற வடபுல முஸ்லிம்கள் மற்றும் இலங்கையில் உள்ள பணம் படைத்தவர்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள், அரிசயல் பிரமுகர்கள் என அனைவரினதும் உதவிகளைப் பெற்று வரும் இரண்டு மாதங்களுக்குள் குறித்த நிதி இலக்கை அடைந்துகொள்வதற்கு வடபுல நியுஸ் நடவடிக்கை எடுக்கும் என அதன் நிர்வாக தலைவர் அஷ்ஷெய்க் அஷ்ரப் முபாரக் (ரஷாதி) தெரிவித்தார்.
இதற்காக கட்சி, பிரதேசம் வேறுபாடுகளின்றி அனைவரும் ஒற்றுமையாக, அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்