தங்கொட்டுவ,மாக்கந்துற,மற்றும் ஹோமாகம கைத்தொழில் வலயங்களில் உள்ள 15 தொழிற்சாலைகள்,கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சின்,கைத்தொழிற் சக்தி செலவு குறைப்பு குறிக்கோல் பணித்திட்டத்னுடாக அதிக சக்தி வினைத்திறனுடையதாக மாற்றம் பெற்று அதனுடாக பிராந்திய சந்தையில் முன்னிலை இடத்தை அடைவது தொடர்பான செயலமர்வு இன்று(2011.12.14) கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இடம் பெற்றது.
கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சும்,மெட்றோ பொலிடன் இன்ஜினியரின் பிரைவெட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து இந்த திட்டத்தை நடை முறைப்படுத்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்த்து.
மெட்ரோ பொலிட்டன் நிறுவனம் கடந்த 5 வருட காலமாக சக்தி நெறிப்படுத்தல் தொடர்பான தமது அனுபவத்தை வழங்கிவருவதுடன்,இதன் மூலம் வருமான அதிகரிப்பை பெற்றுக் கொள்ளவும் உதவி வந்துள்ளது.
தற்போது அபிவிருத்தி அடைந்த நாடுகள் பொருளாதார ரீதியான பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளது.அதே போன்று சீனா,இந்தியா போன்ற நாடுகளும் இன்று இப்பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளதாக அவதானிக்க முடிந்த்து என கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் செயலாளர் திலக் கொல்லுரே அச்செயலமர்வில் உரையாற்றும் போது கூறினார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் கைத்தொழில் துறையில் 8.4 சதவீதமாக காணப்ப்டுவதாகவும்,ஏற்றுமதி துறையின் 74 சதவீத பங்களிப்பும் இதற்கு கிடைக்கப்பெற்றுவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதே வேளை 2012 ஆம் ஆண்டில் தற்போது பாவனையில் உள்ள மின்சக்தி,எரிசக்தி பாவனையை கைத்தொழிற் துறையாளர்கள் சேமிக்க முடியுமாக இருப்பின் அதனுடாக அதிக உற்பத்திக்கான இலாபத்தை அடைய முடியும் என்றும் கைத்தொழில்,வணிகத் துறை பிரதி அமைச்சர்
ஜயரத்ன ஹேரத் இங்கு குறிப்பிட்டார்.அமைச்சர் றிசாத் பதியுதீனின் வழிகாட்டலில் சக்தி முகாமைத்துவ திட்டத் நடை முறைப்படுத்த 4.5 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறிய பிரதி அமைச்சர் உற்பத்தியாளர்கள் அதிக நன்மையடையச் செய்வதன் மூலம் தரமான சர்வதேச சந்தையில் போட்டியிடக் கூடிய உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
சக்தி முகாமைத்துவ வல்லுனர்களான இலங்கை நீண்டகால சக்தி வள அதிகார சபையின் தலைமை நிர்வாகி.டாக்டர் துசித சுகதபால,மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.ராகுல அனுர அட்டலகே,மற்றும் எச்.வி.ஏ.சீ.சிஸ்டம் நிறுவனத்தின் ஆலோசகர்.விஜித பெரேரா ஆகியோரும் செயலமர்வின் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
மெட்ரோ பொலிடன் இன்ஜினியேரின் பிரைவெட் லிமிடெட் குறுப் நிறுவனத்தின் தலைவர் ஜே.ஜே.அம்பானி,பிரதி அமைச்சர் ஜயரத்ன ஹேரத்திடமிருந்து வர்த்தக சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment