வடமாகாண சமூக சேவை திணைக்களத்தினால் விதவைகள்,முதியோர்கள்,ஊனமுற்றவர்கள்,பாரிய நோயினால் பிடிக்கப்பட்டவர்கள் மற்றும் தங்கி வாழ்பவர்களுக்கான கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டுவருவதாக வடமாகாண ஆளுநரின் புத்தளம் ,மன்னார் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன் தெரிவித்தார்.
இன்று 13 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 16 ஆம் திகதி வரை இந்த கொடுப்பனவு புத்தளம் மற்றும் அநுராதபுரங்களில் வழங்கப்படுமென தெரிவித்துள்ள அவர்,திகதி குறிப்பிட்ட தினங்களில் உரிய நலன் புரி முகாம்களில் மக்கள் இருக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
13-12-2011 -காலை 9.00 மணி 1.30 வரை –ஹூசைனியா புரம்-பாலாவி
பள்ளிவாசல் துறை –கல்பிட்டி,முஹம்மதியா புரம்-கல்பிட்டி
13-12-2011 - பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும்....
குசிக்கரம்பை-கண்டக்குளி,ஏ.ஜீ.ஏ.முகாம்-கல்பிட்டி,ஹிஜ்ரத்புரம்-பாலாவி
14.12.2011 - காலை 9.00 மணி முதல் 4.15 வரை -.இடம் பெயர்ந்தோருக்கான செயலகம் – புத்தளம்
15.12.2011 - காலை 9.00 மணி முதல் 4.15 வரை -.இடம் பெயர்ந்தோருக்கான செயலகம் – புத்தளம்
16.12.2011 - காலை 11 மணி முதல் 2.30 வரை-
ஹிஜ்ராபுரம்கனேவல்பொலஅநுராதபுரம்-
(அநுராதபுரம் மாவட்டத்தல் நாச்சியா தீவு,மரதன்கடவல பயணாளிகளும் கணேவல்பொலயில் இந்த கொடுப்பனவை பெற்றுக் கொள்ளலாம்)
No comments:
Post a Comment