Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, December 10, 2011

முல்லைத்தீவில் விவசாய செய்கை வளம் பெற்றுள்ளது என்கிறார் அமைச்சர் றிசாத்




முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடம் மட்டும் 32 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வன்னி மாவாட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை  அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.


முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
கடந்த கால யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அதி கூடிய விளைச்சலை இம்முறை பெற்றுக் கொள்ள முடிந்த்தாக அமைச்சர் கூறினார்.அத்தோடு மீள்குடியேறியுள்ள் மக்களின் பிரதான வாழ்வாதார தொழிலாக விவசாயம் மாறியுள்ளதால்,அவர்களுக்கான பல உதவிகளை அரசாங்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
எமது நாட்டுக்கு தேவையான விவசாய உற்பத்தி பொருட்களை வழங்கும் மாவட்டத்தில் முல்லைத்தீவினையும் அறிமுகப்படுத்த அனைத்து நடவடிக்கையினையும் எடுக்கவுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.னகரத்தினம் உட்பட அரச திணைக்கள தலைவர்களு கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment