புத்தளம் நகரத்தி்ல் மக்கள் பயன்படுகளுக்கு பெரிதும் பொறுத்தமற்று காணப்படும் பாதைகளை புனரமைக்கும் பணிகளை புத்தளம் பௌத்த,கத்தோலிக்க,இந்து,முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.
புத்தளம் பிரதேச அமைப்புக்கள்,மற்றும் மதத் தளங்களின் நிர்வாகம் என்பன விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் அலிசப்ரி தெரிவித்தார்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் பாதை புனரமைப்பு பணிகளுக்கு பொது மக்கள் தமது சிரமதான பங்களிப்பை வழங்கிவருவதாகவும் அவா் கூறினார்.
தற்போது புத்தளம் 617 பி கிழக்கு கிராம சேவகர் பிரிவின் பாதைகள் செப்பனிடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment