அகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சியின் தலைவரான தன்னைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கைகளை வெளியிட்ட கட்சியின் செயலாளர் வை. எல். எஸ். ஹமீட்டை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்த கட்சியின் உயர்குழு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கட்சியின் தற்காலிக செயலாளராக உயர்குழு உறுப்பினர் ஷாஜகான் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், என்னைக் கட்சியிலிருந்து நீக்குவதாக ஹமீட் அறிக்கைகளை விட்டிருந்தார். அது முகப்புத்தகம் உள்ளிட்ட சமூகவலைத் தளங்களில் பரவியிருந்தது. அவ் அறிக்கைக்கான மறுப்பு அறிக்கையை ஹமீட் வெளியிடுவார் என நேற்று வெள்ளிக்கிழமை(21) மாலை வரை பார்த்திருந்தோம். எனினும் அவர் எந்தவித அறிக்கைகளையும் வெளியிடவில்லை. எனவே, அவதூறான செய்திகளைப் பரப்பிய ஹமீட்டை கட்சியிலிருந்து நீக்குவதாக கட்சியின் உயர்குழு இன்று(22) காலை முடிவெடுத்தது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள கட்சியின் தவிசாளர் அமீர் அலி தலைமையில் நான்கு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசியப்பட்டியலில் ஆசனம் கிடைக்காததால் கட்சிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயற்படுகின்றவர்கள் மீதும் கட்சியின் உயர் குழு நடவடிக்கை எடுக்கும். மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் ஸ்தாபித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரவூப் ஹக்கீமின் தலைமையில் தவறான பாதையில் சென்றதால், அதிலிருந்து விலகி நானும் அமீர் அலியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆரம்பித்தோம். கட்சி ஆரம்பித்து 5 வருடங்களுக்குள் எமக்கு 5 ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதற்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாக்குகள் எண்ணும் தினத்தன்று நள்ளிரவு 12 மணிமுதல் காலை 4 மணிவரை அம்பாறை மாவட்டத்தில் எமக்கு ஆசனம் கிடைக்கும் என தகவல்கள் கிடைத்தன. எனினும், காலை 4 மணிக்குப்பின்னர் ஆசனம் கிடைக்கவில்லை என்ற செய்தி கிடைத்தது. எங்களுக்கு இதில் சந்தேகம் உள்ளது.ஒருசில மணிநேரங்களுக்குள் எவ்வாறு நிலை மாறும். இது தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் பேசி எங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் கைப்பற்றுவோம். மேலும், மட்டக்களப்பில் வெற்றிபெற்ற எமது கட்சியின் அமைப்பாளர் அமீர் அலி, அம்பாறையில் வாக்களித்த எமது மக்களுக்கான பணியை முன்னெடுப்பார். கட்சியின் தலைவர் என்ற வகையில் நானும் பக்கபலமாக இருப்பேன் என தெரிவித்தார். அத்துடன், பெரிய கட்சி சிறிய கட்சி என பாராது அனைவரையும் சமமாக நடத்தி தேர்தல்களை சுமூகமான முறையில் நடத்திய தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் நன்றி தெரிவித்தார். கட்சித்தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, கட்சியின் தேசிய அமைப்பாளர் ஏ. ஏ.எம். ஜெமீல் உட்பட கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். - See more at: http://www.tamilmirror.lk/152560#sthash.mjuHa19j.dpuf