Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, July 11, 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறுதி முடிவு நள்ளிரவையும் தாண்டும்...

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும் 60 மணித்தியாலயங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் சிறுபான்மை முஸ்லிம் கட்சிகள் இன்னும் இறுதி முடிவுகளை எடுக்காத நிலையினையே காணமுடிகின்றது.

குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இன்னும் தீர்மானங்களை எடுக்கவில்லை.

இந்த நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதியுயர் பீடக் கூட்டம் இன்று மாலை 7.00 மணிக்கு இடம் பெறவுள்ளதாக கட்சியின்  செயலாளர்  நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

குருநாகல்,அநுராதபுரம்,புத்தளம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது வேட்பாளர்களை ஜக்கிய  தேசிய கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதற்கான உடன்பாட்டை யிட்டுள்ளது.
அதே வேளை கண்டி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கட்சியின் நம்பகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு கூடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதியுயர் பீடக் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

திருகோணமலை மாவட்டத்தில் பலமிக்கதொரு வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் கட்சியின் முக்கிய ஆதரவாளர்களுடன் தற்போது முக்கிய கலந்துரையாடலொன்று கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெறுகின்றது.