Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, December 11, 2014

நினைத்தால் ரணிலையும் எம்பக்கம் எடுப்போம் - ஜனாதிபதி

நினைத்தால் ரணிலையும் எம்பக்கம் எடுப்போம் - ஜனாதிபதிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில் இன்று ஆரம்பமானது. 

கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்தப் பொதுக்கூட்டம் தற்போது அநுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. 

ஜனாதிபதி இங்கு உரையாற்றுகையில், 

நீங்கள் எங்கள் செயலாளரை எடுத்தால் நாங்களும் உங்கள் செயலாளரை எடுப்போம். திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. இரண்டு பேரும் உட்கார்ந்து கோபி ஒன்றுதான் குடித்தோம். நாங்கள் நினைத்தால் ரணிலையும் எங்கள் பக்கம் எடுக்க முடியும். ஒரு கோப்பை தேனீர் கொடுத்தால் ரணிலும் எங்களோடு இணைந்து விடுவார். 

எங்களுடைய இராணுவம் ஒரு நாளும் பொது மக்களை கொலை செய்ய வில்லை. ஆரம்பத்தில் மக்கள் என்னிடம் யுத்தத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களுக்காக நான் யுத்தத்தை நிறுத்தினேன். 

அதன் பின்பு நாட்டை அபிவிருத்தி செய்யுமாறு கேட்டு கொண்டனர். அதனையும் நான் நிறைவேற்றினேன். மேலும் என் கையில் இரத்தம் படியவில்லை, படிந்தால் கையை வெட்டி வீசிவிடுவேன். 

இம்முறை நான் ஜனாதிபதியான பின்பு அநுராதபுர மக்களுக்கு சுத்தமான குழாய் நீர் வழங்குவதே எனது திட்டமாகும். நாங்கள் இந்த முறை குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து வரவு செலவு திட்டத்தினை செய்யவில்லை. மக்களோடு இறங்கி வந்து அவர்களுடைய கஷ்டத்தனை அறிந்து இந்த வரவு செலவு திட்டத்தினை தயாரித்துள்ளோம். 

எதிர்வரும் காலத்தில் நாட்டினை ஒற்றுமையான பாதையில் கொண்டு செல்வதே எனது நோக்கமாகும். அனைவரும் பொறுமையாக இருந்து இந்த ஜனாதிபதி தேர்தல் வெற்றியினை பாருங்கள் என்று தெரிவித்தார்.