Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, December 11, 2014

அத்துருகிரிய விமான விபத்தில் நால்வர் பலி! (படங்கள் இணைப்பு)

கட்டுநாயக்கவில் இருந்து ரத்மலானை நோக்கி பயணித்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ - 32 ரக விமானம் கோகந்தர வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர். 

இவ்விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். 

(Thanks-Ade Derane)

இன்று அதிகாலை விமானம் விபத்துக்குள்ளான போது அதில் 5 பேர் பயணித்துள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் வின் கமான்டர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார். 

விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகில் இருந்த வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அத்துருகிரிய விமான விபத்தில் நால்வர் பலி! (படங்கள் இணைப்பு)