Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, December 16, 2014

பிரபாகரனை ஒழித்தது போல் கே.பி.யை பிடித்ததும் பெரும் வெற்றியே!

பிரபாகரனை ஒழித்தது போல் கே.பி.யை பிடித்ததும் பெரும் வெற்றியே!பிரபாகரனை தோல்வியடைச் செய்தது போல கே.பி.யை பிடித்ததும் பாரிய வெற்றி என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரிவி தெரணவில் நேற்று இரவு ஒளிபரப்பான ´360´ நேரடி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாத நிறைவில் சரணடைந்த புலி உறுப்பினர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்திய போதும் அவர்கள் நூறு வீதம் மாற்றம் அடைந்ததாகக் கூற முடியாதென பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

ஆனால் புலனாய்வு பிரிவை பலப்படுத்தியுள்ளதால் எவ்வித அழுத்தம் வந்தாலும் அதனை எதிர்கொள்ள முடிவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்காரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள போதும் சர்வதேச சக்திகள் இன்னும் செயற்பாட்டில் இருப்பதாகவும் ராஜபக்ஷவை பலமிழக்கச் செய்தால் மாத்திரமே செயற்பட முடியும் என்ற நோக்கத்தில் அந்த சக்திகள் செயற்படுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

ராஜபக்ஷ அல்ல வேறு யார் அரசாங்கத்தை கைப்பற்றினாலும் சர்வதேச அழுத்தம் தற்போதைய நிலைபோன்றே காணப்படும் என அவர் கூறியுள்ளார்.

புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள், ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில், ததேகூ போன்றவறறால் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இதன்மூலம் இராணுவ நீதிமன்றுக்கு ஒரு தரப்பினரை கொண்டு செல்லும் அபாயம் காணப்படுவது தெளிவாவதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் பயங்கரவாதத்தை அழிக்க முடிந்ததாகவும் தான் அரசியலுக்கு வருவது பற்றி கூற முடியாது என்றும் அரசியலில் ராஜபக்ஷமார் அதிகம் இருப்பதால் தானும் அரசியலுக்கு வருவேன் என்ற அச்சம் பலருக்கும் இருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.