இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக
கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அத்துமீறல்கள் தொடர்பில் பல்வேறு பேச்சுக்கள் இடம் பெற்றுவரும்
நிலையில் மற்றுமொரு மாகாண சபை தேர்தலை மக்கள் எதிர் கொள்ள தயாராகின்றனர்.கடந்த சில
மாதங்களாக பேசப்பட்டுவந்த பொதுபலசேன அமைப்பின் தாக்குதல்கள் தொடர்பில் எந்த அளவுக்கு
முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் எடுக்கப்பட்டுள்ள
கருத்துக் கனிப்புக்கள் இந்த தேர்தல் முடிவில் மக்களின் தீர்ப்பாக அமையும் என்பது எதிர்வு
கூறல்களாகும்.
குறிப்பாக இலங்கையில் இடம் பெற்ற
30 வருட யுத்தம் அதன் பின்னரான மாற்றங்கள்,மாற்றங்களுக்குள் மறைந்திருந்த தாக்குதல்கள்,என
பல கோண சிந்தணையில் இன்று மக்கள் ஆழ்ந்திருக்கின்றனர்.யுத்த அழிவுகளோடு நாட்டினை நோக்கும்
போது சில ஆக்க பூர்வமான முற்றேங்களை காணலாம்.அதற்காக எல்லாம் சரி என்று தீர்மானித்துவிடவும்
முடியாது,இருந்த போதும் அன்றைய சதி திட்டங்களின் வெளிப்பாடு ஒட்டு மொத்த முஸ்லிம்களி்ன்
சுத்திகரிப்பு (ETHINIC CLEANCING) என்ற
பதத்தை பதியவைத்தது என்பதையும் நாம் மறந்தவிடலாகாது.
அழிவுகளுக்கும்,பெரும் இழப்புக்களுக்கும்
இறையாகும் சமூகமாக முஸ்லிம்கள் மாறிவருவது கவலைத்தரும் ஒன்றாகும்.முஸ்லிம்கள் எள்ளி
நகையாடப்படுகின்றார்கள்.அவர்களுக்கு போதுமான அரசியல் தலைமைத்துவம் இல்லை என்று நம்மில்
பலர் பேசுவதுமுண்டு.இது அவர்களது வழமையான பாடலாகும்.இவ்வாறு பாடுபவர்கள்,முஸ்லிம்கள்
தொடர்பில் எடுத்துவரும் நகர்வுகள்,உவர்தல்,காய்தல் இன்றி அமைகின்றதா என்பதையும் நாம்
ஒரு முறை மீள்பார்வை செய்வதும் இந்த காலத்தின் முக்கிய தேவையாகும் என்பதை நாம் உணர்கின்றோம்.கடந்த
கால அனுபவங்கள் எதிர்காலத்தின் தீர்மானத்திற்கு ஒரு கை உதவியாகும் என்பதை அதிகமானவர்கள்
ஏற்றும் கொண்டுள்ளார்கள்.பல்வேறு கேள்விகளால் சூழப்பட்டுள்ள நாம்,எமது எதிரிகளை எவ்வாறு
நண்பர்களாக மாற்றிக் கொள்வது என்ப தொடர்பில் அதிகம் கவனத்தை நுழைக்க வேண்டும் .இது
தான் இன்றைய எமது சமூகத்தின் தலைவிதியின் தகுதியினை உத்தரவாதப்படுத்தும் ஒன்றாக நோக்க
முடிகின்றது.
தனிப்பட்ட விருப்பு,வெறுப்புக்கள்
என்பது மனித குணாதிசயங்களில் இன்றியமையாதது என்பது போன்று உணர்வுகளுக்கு இடம் ஏற்படுத்து
ஓர் அம்சமமாகும்.இவ்வாறானதொரு காலத்தில் இலங்கையில் ஊவா மாகாண சபைக்கான தேர்தல் இடம்
பெறவுள்ளது.கடந்த காலத்தில் இடம் பெற்ற தேர்தல்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள்
வெளிவருகின்ற போதும் இந்த தேர்தல் எதனை சாதிக்கப்போகின்றது என்பது கேள்வியாகும்.இதற்கு
வெறும் ஒரே வார்த்தையால் தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்க கூடாது என்று கூறுபவர்களும்
உண்டு.இவர்களையும் நாம் புறக்கணிக்க முடியாது.இவர்களது கருத்திலும் உண்மையும் உண்டு,அதே
போல் தேர்தலை ஆதரிப்பவர்களின் விகிதசாரம் அதிகமாக இருக்கின்றதை சில கணிப்பீடுகள் பெற
முடிகின்றது.இலங்கை அரசிலை பொறுத்த வரையில் அதிகார வர்க்கம் என்றால் அரசியல் வாதிகள்
என்று அழுத்தி கூறப்பட்டவருகின்றது.அதற்கு பல்வேறுபட்ட காரணங்களை கூறலாம்.அது குறித்து
ஆராய்வது இன்றைய இந்த தலைப்பின் நோக்கமல்ல என்பதையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.
கடந்த காலத்தில் இடம் பெற்ற ஜனாதிபதி
தேர்தல்,உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள்,மாகாண சபை தேர்தல்கள்,பாராளுமன்ற பொதுத் தேர்தல்களிள்
போது கட்சி சார் முஸ்லிம்களும்,அரச சார் கட்சிகளும்.ஆட்சி மாற்றத்திற்காக இடைத்தரகர்களாக
செயற்பட்ட அமைப்புக்களும் இந்த தேர்தலிலும் தமது பலத்தை பிரயோகிப்பது திண்ணம்.இந்த
கட்சிகளில் பல மக்களினால் ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,வீரியமும் குறை்நத நிலையினை தக்க வைத்து
செயற்படுவதையும்,அவ்வப்போது இடம் பெறும் சில விரும்பத்தாக சம்பவங்களின் போது அறிக்கைகளுக்கு
மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுவருவதும் அதற்காக சில ஊடகங்களை தம் வசப்படுத்தி வைத்துள்ளதும்,இந்த
தேர்தலிலும் முகம்காட்டும் என்பது யதார்த்தம்.
இந்த பார்வைகளுடன் எமது தலைப்பின்
முக்கிய அம்சமாக முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற கோஷமும்,வேண்டுகோளும் மிகவும்
நீண்டு கொண்டே வருகின்றது.பூணைக்கு யார் மணி கட்டுவது என்ற பழமொழிக்கொப்ப பல் வேறு
முயற்சிகளை கடந்த தேர்தல் காலங்களில் அமைப்புக்கள்,நலன் விரும்பிகள்,கட்சிகளின் தலைமைகள்
ஒன்று சேர்ந்து பல மணித்தியாலயங்கள் முயற்சித்த போதும் இறுதியில் அவை விழலுக்கிறைத்த
நீராக வீணாகியது.இதனால் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை அற்றுப்போனது.அதன் பிற்பாடு
அண்மைய சில சம்பவங்கள் முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் மீதும்,முஸ்லிம் தலைமைகளின் மீதும்
ஓரப்பார்வையினை செலுத்தும் நிலையினை உருவாக்கிவிட்டது.
இது இவ்வாறு இருக்கையில் மீண்டும்
இலங்கை அரசியலில் தீர்க்கமான முடிவினை எடுப்பது தொடர்பில் முஸ்லிம் கட்சிகள் இன்றைய
காலத்தினை பயன்படுத்த வேண்டும் என்ற அளுத்தம் நாளா பாகாங்களிலும் இருந்து ஏவப்பட்டது.இது
இன்று ஒரு புதிய அரசியல் வீரியத்தை அத்திவாமிட்டுள்ளதை பாரக்க முடிகின்றது.முஸ்லிம்கள்
பிரிந்து நின்று எதனையும் சாதிக்க முடியாது,அத்தோடு பேரம் பேசும் சக்தியினை தக்க வைத்துக்
கொள்வதன் மூலம் முஸ்லிம் எதிர் சக்திகளுக்கு தகுந்த பதிலினை அரசியல் ரீதியாக மட்டும்
சமூக ஒற்றுமையுடன் எதிர் கொள்ள தயாராக வேண்டும் என்பது இன்று உணரப்பட்டுவிட்டது.இதன்
பலனாக ஊவா தேர்தல் கலத்தில் அரசியலில் எதிரியும் அல்ல நண்பனுமல்ல அரசியல் கட்சிகள்
என்பது மதமல்ல,அது மக்களின் விமோசனத்திற்கும் , உரிமைக்கும் எழுந்து பேசும் ஆயுதம்
என்பதை தற்போது நிரூபிக்கும் பாதை திறந்துள்ளது.இந்த சந்தரப்பம் ஒரு பசுமையான புதிய
அரசியல் மாற்றத்தின் ஆரம்பமும்,எதிர்காலத் தேர்தலுக்கான அத்திவாரமுமாகும் என்றால் அது
மிகையாகாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும்,அகில
இலங்கை மக்கள் காங்கிரசும் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் தமது வேண்டபாளர்களை நிறுத்தியுள்ளமை
ஒரு பலமாகும்.அமைச்சர் ரவூப் ஹக்கீம்,மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் தொடர்பில் வித்தியாசமான
பார்வைகள் செலத்தப்படலாம்.அது அவர்களது ஆளுமையினதும்,உணர்வுகளினதும் பெருமானத்தின்
அளவாகும்.ஒருவர் விட்டுக் கொடுக்கின்ற போது மற்றவர் அதனை கொளு கொம்பாக பயன்படுத்தி
வளர்வது அரசியல் கற்றவர்களுக்கு தெரிந்த சக்கரமாகும்.
எது எவ்வாராக இருந்தாலும் இன்றைய தேவை முஸ்லிம்களின் பாதுகாப்பு
அதற்கான உத்தரவாதம்,இவற்றை பெருவது என்பது அரசியல் பலத்தின் கைகளில் இருக்கின்றது என்பதை
கடந்த கால சம்பவங்களின் போது எமது முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் செயற்பட்டவிதத்தை
வைத்து எடை போட்டுபார்க்கலாம்.இதனை மையமாக கொண்டு நாம் மக்களுக்கு பலனளிக்கும் நல்ல
முயற்சிகள் இருப்பின் அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவது எமது சமுதாய கடமையின் முக்கிய
பங்காகும்.சமூகமின்றி தனி மனிதனுக்கு வாழ்வில்லை என்பது போன்று தனிமனிது ஆக்கம்,ஊக்கம்,சிந்தணை
என்பன சமூகத்தின் ஆரோக்கியத்துக்கு பக்கபலமாகும் என்பதை உணர்ந்து நாம் செயற்படுவோம்.