Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, August 15, 2014

காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால் தெரியும்....




இலங்கையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தொடர்பில் பெறும்பான்மை கட்சியொன்றின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துவரும் கருத்து தொடர்பில் அதற்கு எமது முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி ஆலோசிப்பது கலாத்தின் இன்றைய தேவையாகும்.கடந்த சில வருடங்களாக குறிப்பாக தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் முதல் அதன் பின்னரான  பல்வேறு முஸ்லிம் எதிர் செயற்பாடுகளின் பின்னணியில் இந்த பெரும்பான்மை சிங்கள கட்சியின் தலைவர் இருப்பது தொ்டர்பில பல ஆக்கங்கங்கள் எமது பார்வைக்கு தென்பட்டது.


இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்கள் முதன்மையானவர்கள் மட்டுமல்லாது பெரும்பான்மை சிங்கள மன்னர்களை பாதுகாத்தவர்கள்,சிங்கள அரச அரண்மனையில் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து வந்துள்ளார்கள் என்பதை சிங்கள வம்சவரலாற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வகையில் இலங்கையில் அரசாட்சியில் முஸ்லிம் என்ற நாதமதத்துக்கு தனியானதொரு இடம் இருக்கின்றது.இந்த இடத்தை இலங்கை அரசியலின் ஞாம்பவானாக இருந்து அதனை வரலாற்று பதிவாக ஆக்கிய அரசியல் தலைவர்களான மர்ஹூம் பதியுதீன் முஹம்மத்,எம்.எச்.எம்.அஷ்ரப்,ஏ.சீ.எஸ்.ஹமீத்,பாக்கிர் மாக்கார்,எம்.எஸ்.இஸ்மாயில்,எம்.எம்எச்.நெய்னா மரைக்கார் இவர்கள் முன்னுரிமைப்பட்டிலில் இருக்கின்ற போது,தற்போதைய இலங்கை அரசியலில் பேசக் கூடியவர்களாக அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,றிசாத் பதியுதீன்,ஏ.எச்.எம்.பௌசி,ஆசாத் சாலி,முஜிபுர் ரஹ்மான் போன்றவர்களை எம்மால் அடையாளப்படுத்த முடியும்.அதே போல் பாராளுமன்ற உறு்பபினர்கள் மற்றும் மாகாண,நகர சபைகளின் பிரதிநிதிகளும் காணப்படுகின்றனர்.
குறிப்பாக இலங்கையின் அரசியல் பாகங்களை பிரித்து நோக்கும் போது பிரதான கட்சிகளில் முஸ்லிம்கள் இருந்தாலும் இவர்கள் பெரும்பாலான சந்தரப்பங்களில் அந்த கட்சியின் தலைமைத்துவத்தைின் சொற்படியே செயற்படுவார்கள் இது தான் அந்த கட்சியுடன் அவர்கள் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையாகும்.இந்த உடன்படிக்கை என்பது பெரும்பாலான சந்தரப்பங்களில் முஸ்லிம்களுக்கு நன்மையில்லாத நிலையினை தோற்றுவித்தாலும் சில சந்தரப்பங்கள் சாதகமான நிலையினை தோற்றுவித்துள்ளதையும் காணமுடிகின்றது.நடுநிலையான தோற்றத்தினை இந் பெரும்பான்மை கட்சிகளிடத்தில் இருந்து எதிர்பார்ப்பதும் கடினமானது.இந்த நிலையினை கவனத்திற் கொண்டு முஸ்லிம்களினதும்,சிறுபான்மை சமூகத்தினதும் உரிமைகள்,தேவைகள்,பாதுடுகாப்பு தொடர்பில் ஆக்கபூர்வமான,நீண்டகால நன்மைபயக்கும் சிந்தணைகளின் வெளிப்பாடாக தோற்றம் பெற்றது தான் இன்றை அரசியல் பேசப்படும் பொருளாக மாறி இருக்கும் முஸ்லிம் கட்சிகள்,கட்சிகளின் செயற்பாடுகள் என்பது அந்த கட்சியில் உள்ள அங்கத்தவர்களின் உணர்வில் தங்கியிருக்கும் ஒன்றாகும்.ஆனால் சில கட்சிகளின் செயற்பாடுகள் அதீத தன்மையினை கொண்டுள்ளதையும்,சில கட்சிகள் சந்தர்ப்பங்களுக்கு மட்டும் தமது நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தி தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்ளுவதும் சாதாரண ஒன்றாகவே இலங்கையில் மாறியுள்ளது.
இலங்கை அரசியலை பொறுத்த வரையில் அன்றைய ஆட்சியின் காலத்தினை தீர்மாணிக்கும் சக்தியாக முஸ்லிம்களின் வாக்குப்பலமும் சிறுபான்மை கட்சிகளின் தயவு தாட்சனையும் தேவையாக இருந்தது.ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளத.ஏனெினல் அன்று தனிக்கட்சிகளாக இருந்த பல கட்சிகள் இன்று ஆட்சிக்கு வரும் கூட்டணியுடன் இணைந்துவிடுகின்றதால் பெரும்பாண்மை பலம் சிங்களவர்களாகவே இருக்கின்ற நிலையினை காண முடிகின்றது.நடை பெற்று முடிந்த பல தேர்தல்களில் இதனை  பெருான்மை கட்சிகள் நிரூபித்துக காட்டியுமுள்ளன.இவ்வாறானடிதொரு நிலையில் சிறுபான்மை பெயர்களை கொண்ட கட்சியில் போட்டியிட்டு அரசுடன் இணைந்து செயற்படும் கட்சிகள் தமது மக்களின் அபிலாஷைகளை  பெற்றுக் கொடுப்பதற்கு பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.இறுதி கட்ட போராட்டமாக அரசாங்கத்திற்கு வழங்கிவரும் ஆதரவை விலக்கி கொள்ளப் போகின்றோம் என்ற அச்சுறுத்தலை வழங்கியே பல்வேறு நியாயங்களை பெறவேண்டியுமுள்ளது.அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.என்ற பழமொழிக்கு ஒப்ப ஆட்சியில் எந்த பதவியில் இருந்தாலும் இறுதியில் சொல்ல முடியாத கோறிக்கைகளும்,அமைச்சரவைக்குள் இடம் பெறும் கழுத்தறுப்புக்களும் ஏராளம் என்றே கூற வேண்டும்.
இந்த நிலையில் எமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம்கள் தொடர்பில் பேசுகின்ற போதும்,முஸ்லிம்களுக்கு எதிராக இழுத்தடிப்புக்களின் போதும், துணிச்சலுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தர்க்கிக்கின்ற போதும் சிலர் தமது அர்த்தமற்ற கருத்துக்களை தெரிவித்துவருவதுடன்,எமது சமூக ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் செயற்பாடுகளே அதிகமாகவே இடம் பெறுகின்றது..இது தவிர்க்கப்படுகின்ற போது நாம் இன்னும் எத்தனையோ நன்மைகளை கண்டுகொள்ள முடியும்.
இன்றைய சூழ் நிலையில் வெறும் அமைப்புக்கள் தனியாக நின்று தமது தேவைகளையும்,பிரபல்யங்களையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் செயற்படுகின்ற போது அதனுாடாக நாம் எதிர் பார்க்கும் இலக்கை அடைந்து கொள்ள முடியாது.இவ்வாறான நிலையில் பெரும்பான்மை கட்சியின் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர்,சந்தரப்பத்தை சரியாக புரிந்து கொண்டு அரசில் இருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களான அமைச்சர் ரவூப் ஹக்கீம்,றிசாத் பதியுதீன் அகியோர் குறித்து தெரிவிக்கும் கருத்துக்கு நாம் ஒவ்வொருவரும் எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும்.
எவர் எதனை சொன்னாலும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல் தொடர்பில் துணிச்சலுடனும்,தைரியத்துடனும் பேசும் தலைவர்கள் என இவர்களை நாம் அடையாளப்படுத்த முடியும்.தனிப்பட்ட பார்வைகளுக்கு அப்பால் சமூக நோக்குடன் சிந்திக்கும் எண்ணம் இவர்களுடம் குடிகொண்டிருக்கின்றது.இந்த முக்கிய இரண்டு தலைர்களான அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் ,றிசாத் பதியுதீன் ஆகியோர் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.தலைவலியும்,காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்ற வாக்கிற்கமைய ஒவ்வொருவரும் சமூகத்தின் வேதனைகளையும்,சோதனைகளையும் சுமந்து பார்க்க வேண்டும்.முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அவற்றை சாதகமாகமாக்கி அதில் குளிர்காயாமல்,அதனை உடன்பாட்டுக்கு கொண்டு வந்து ஆரோக்கியமான நடவடிக்கைகளுக்கு அடித்தளம் இடும் பணியே இன்று தேவையானது.