Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, June 14, 2014

இலங்கை முஸ்லிம்களின் தாக்குதல் பின்னணி..பொதுபலசேனாவுக்கு உதவுவது இஸ்ரேலா ?


-    இர்ஷாத் றஹ்மத்துல்லா -
இலங்கையின் அரசியல் யாப்பில் இலங்கை பிரஜையொன்றுக்கு வாழும் உரிமை தொடர்பில் குறிப்பிட்டுள்ள அம்சங்களும்,விளக்கங்களும் இன்று அமுல்படுத்தப்படுகின்றதா என்பது கேள்விக்குறியானதே,மத உரிமை.மொழி உரிமை உள்ளிட்ட இன்னும் அடிப்படை உரிமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் காணப்படுகின்றன.அண்மையில் பதுளை மற்றும் பேருவளை,மொரட்டுவ பகுதிகளில் பொதுபலசேனாவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மேலும் இலங்கை முஸ்லிம்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது.


அரசியல் யாப்பின் 10 ஆம் 11 ஆம் பிரிவுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள மதம் சார்ந்த உரிமைகளை ஒரு போதும் பறிக்கமுடியாது என்பதை  பார்க்கலாம்.சர்வவேச நாடுகளுக்கிடையில் செய்யப்படும் உடன்படிக்கையிலும் இவ்விடயம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு இருக்கையில் இலங்கையில் அண்மைக்காலமாக நடத்தப்படும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீதான பெறும்பான்மையினரின் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேசம் தமது தலையீட்டை செய்ய வேண்டிய நிலை உருவாகவுள்ளது.சர்வதேச அளுத்தத்தை எதிர்த்து அரசாங்கம் மேற்கொள்ளும் இராஜதந்திர முயற்சிகள் ஒரு புறமிருக்க அப்பாவி முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகள் தொடர்பில் பேசுவதற்கு அரசாங்கம் பின்னிற்பது யோசணைக்குரியது.
மியன்மாரில் முஸ்லிம்களும் மீது மேற்கொள்ளப்படும் கொடூரத்தை நாம் தின்நதோறும் ஊடகங்கள் மூலம் பார்க்கின்றோம்.அதே போல் இஸ்ரேலின் ஊடுருவல் மறுபுறம்.இலங்கையில் முஸ்லிம்கள் மீது தொடுக்கப்படும் இன ரீதியான உரிமை மீறல்களின் பின்னணியில் இஸ்ரேல் இருக்கின்றதா எனபது தற்போது சிந்தணைக்கு வந்துள்ளது.முஸ்லிம்ளை ஒட்டுமொத்தமாக துவம்சம் செய்து,அவர்களின் இஸ்லாத்தின் எழுச்சியை இல்லாமல் செய்யும் நிகழ்ச்சி நிரல் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.இந்த நிலையின் வெளிப்பாடு தான் பொதுபலசேனாவின் மூர்க்கத்தனமான செயற்பாடுகளாகும்.அதனை எமது முஸ்லிம் தலைமைகள் கண்டித்த போதும் அதற்கு போதுமான பெறுமனாம் கிடைப்பதில்லை என்பது உண்மையாகும்.
இலங்கையில் இன மோதல் ஒன்று தற்போது இடம் பெறுகின்றது.அது தான் இன்றை இந்த தாக்குதல் சம்பவங்கள் என்பது உறுதியானதாகும்.இதனை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது.ஆரம்ப நிலையில் சில கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பின் இன்று இவ்வளவு துாரம் அதனது வீச்சு இருந்திருக்காது.
அப்பாவி சிறுவர்கள் முஸ்லிம்கள் என்பதால் தாக்கப்படும் படுமொசமான மிருகக் குணம் வளர்ந்துவருகின்றது.அத்துடன் பெரும்பான்மை யுவதிகளை(பொதுபலசேனாவின் உறுப்பினர்கள்) முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பி முஸ்லிம்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்கள் என்று அடையாளப்படுத்தும் விஷமத்தனமாக நாடகங்களையும் இந்த பலசேனா ஆரம்பித்துள்ளது.இவர்களது கொட்டத்தை அடக்க முடியாமல் தடுமாறும் பாதுகாப்பு தரப்பினரின் கைகள விளங்கிடப்பட்டுள்ளது என்பதையும் அவதானிக்க முடிகின்றது.இந்த நிலையில் நாட்டு முஸ்லிம்கள் முஸ்லிம் தலைமைகளின் வீரியமற்ற தீர்மாணங்கள் தொடர்பில் கவலையடைந்துள்ளனர்.
சம்பவங்கள் வருகின்ற போது மட்டும் கிழர்ந்தெளும் தலைமைகள் இன்னும் அரசியல் ரீதியிலும்,பதவிகளை தக்க வைத்துக் கொள்வதிலும் முடிவுகளை எடுக்கின்ற போது,அது அவர்களுக்கு சின்ம சொற்பனமாக இருந்த  போதும் மக்கள் மத்தியில் அதனது கணம் போதுமானதாக இல்லை என்பது வெளிப்படையான உண்மையாகும்.இவ்வாறு சங்கடமான சூழலில் அரசியல் தீர்மாணங்கள் அவர்களது பரிபாஷையில் காய்நகர்த்தல் என்று இருந்தாலும்.அது சமூகத்திற்கு இந்த வித நன்மையினையும் ஏற்படுத்தப் போவிதில்லை.
இலங்கை யமுஸ்லிம் பொறுத்த வரையில் இந்த பெறுமப்பான்மையினரின் தாக்குதலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய வழி முறைகளில் முக்கியமானதாக சர்வதேசத்தின் பார்வையினை அரசின் மீது கொடுக்க கொடுப்பதே இறுதியானதாகும்.அப்படியெனில் இது குறித்து புலம் பெயர் முஸ்லிம்கள்,துறைசார்ந்தவர்கள் அமைப்பு ரீதியாக தமது அளுத்தங்களை கொடுக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.இதனை இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையில் பிரிவினையினை ஏற்படுத்தும் என்று எதிர்வு கூறுவோமெனில்,அதனது பொறுப்பை அவ்வாறு கூறுபவர்கள் ஏற்க வேண்டும்.ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கையில் உள்ள அமைப்புக்கள் காத்திரமான வரைவுக்குள் ஒன்று திரள வேண்டும்.