Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, June 2, 2014

கட்டார் வாழ் புத்தளம் மக்களின் அமைப்பான PUTTALAM ASSOCIATION QATTAR அமைப்பின் பொதுக் கூட்டம்

இலக்கு நோக்கிய பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லுக்கான அடித்தளம் கட்டாரில் வாழும் புத்தளம் மக்களின் அமைப்பான (PUTTALAM ASSOCIATION QATTAR) வருடாந்த பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழைமை (2014.06.06)
             ( கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா )
வாழுகின்ற போது நாம் எமது சமூகத்திற்கு எதை செய்யலாம் என்ற பதத்தின் வெளிப்பாடாக பல்வேறு செயற்பாடுகளை நாம் காணமுடிகின்றது.மனிதன் பிறந்தது முதல் அவன் மரணிக்கும் வரை எத்தனையோ விடயங்களை செய்கின்றான்.அந்த பரிணாம வளர்ச்சிகளின் பின்னால் இறைவனின் அருள் இருக்கின்றது.அதனை சரியாக புரிந்து கொள்கின்ற போது தான் அவன் மன நிறைவை அடைகின்றான்.காலங்கள் மாறுகின்ற போது மனிதனது கோலங்கள் மாறலாம்.ஆனால் நாம் பிறந்த எமது மண்ணிற்கு அந்த மாற்றத்தால் எதனை செய்யலாம் என்பது எம்மில் சிலரிடம் ஏற்படுகின்ற உணர்வாகும்.இந்த உர்விண் வெளிப்பாடு தான் கடல் கடந்து புலம் பெயரந்தவர்களாக தொழில் நிமிர்த்தம் டோஹா கட்டாரில் வசிக்கும் புத்தளத்தின் முத்துக்களால் உதயமான புத்தளம் பெக் என்கின்ற PUTTALAM ASSOCIATION QATTAR இலாப நோக்கற்ற தொண்டு அமைப்பாகும்.


இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் சில சகோதரர்கள் அமர்ந்து சிந்தித்தனர்.எம்மை உருவாக்கிய புத்தளத்தின் மண்ணுக்கு எவ்வாறு எமது பங்களிப்பினை நல்குவது என்று.பல மணித்தியாலங்கள்,பல நாட்கள் இது குறித்து கலந்துரையாடினர்.ஒரு அமைப்பிற்கு தலைமை மற்றும் பதவி நிலைகளை வகிப்பது இலகுவானது,ஆனால் அமைப்பின் இலக்கு அதனது துாய்மை தன்மை அங்கத்தவர்களது அபிலாஷைகள் என்பனவற்றிற்கும்,அதனை கடந்து போட்டித் தன்மைகளுக்கும்,விமர்சனங்களுக்கும் மத்தியில் இந்த அமைப்பை முன்னெடுத்து செல்வதில் உள்ள சவால்களை எதிர் கொள்வது என்பது மிகவும் முக்கியமானதொன்றாகியது.
காய்க்கின்ற மரத்துக்கு கல்லடியும்,பொல்லடியும் என்று சொல்வார்கள்.இதனை அனுபவித்து பார்க்கின்ற போது தான் அதனது வலிகளை உணர முடியும்.இவ்வாறான சூழ்நிலையில் கட்டார் தேசத்தில் அதிகாலை பணிக்கு சென்று இரவு மீண்டும் தரிப்பிடம் திரும்புவதும்,கிடைக்கின்ற ஓய்வு நேரங்களின் சில மணித்தியாலங்களை சமூகம்,பிறந்த மண்,எம்மை வளர்த்த எமது உறவுகள் என்று பகிர்ந்தளித்து பணியாற்றும் இருக்கமான நேரகாலத்தினுள்ளும்,ஒட்டு மொத்த புத்தளம் மக்களின் எதிர்காலம் தொடர்பில் தமது பார்வையினையும்,பங்களிப்பி்னையும் நல்கும் சிந்தணையாளர்களை ஒன்று திரட்டி அதனது வலுவினை நெறிப்படுத்த வேண்டிய தேவையும் இந்த பெக் அமைப்பு தம் தலைமீது ஒரு பொறுப்பாக சுமந்து கொண்டது.அல்ஹம்துலில்லாஹ் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி உருவான கட்டாரின் மையமாக கொண்டு செயற்படும் PUTTALAM ASSOCIATION QATTAR பெக் அமைப்பு தமது இரண்டாவது ஆண்டில் தடம் பதிக்க தயாராகின்றது.
அமைப்பின் உதயத்தின் பின்னால் பல தரப்பின் பங்களிப்பு இருக்கின்றது.இந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இறைவனின் அருள் கிட்ட நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.அதில் பலர் தொடர்ந்தும் கட்டார் நாட்டில் இருக்கின்றனர்.சிலர் தமது பணிக்காலத்தினை முடித்துவிட்டு நாடு திரும்பிவிட்டனர்.இருந்த போதும் அவர்களுடைய பணிகள் இன்றும் இந்த அமைப்பினால் நினைவு கூறப்படுகின்றது.அமைப்பின் ஆரம்பம் முதல் இன்று வரை ஆற்றியுள்ள பணிகள் பாராட்டுக்குறியது.தொழில் நிமிர்த்தம் கட்டார்் வந்து போதிய வழிகாட்லின்றி சிறமப்படும் புத்தளத்து சகோதரர்கள் பலருக்கு அமைப்பின் உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது.சிலர் இங்கு வந்த போதும் எவ்வித தொடர்புகளுமின்றி இருக்கின்ற நிலை தெரியவருகின்ற போது அவர்கள் தொடர்பிலும் பல முயற்சிகளை PUTTALAM ASSOCIATION QATTAR (பெக்) செய்துவருகின்றது.இன்னும் பலர் எவ்வித தொடர்புகளுமின்றி இருக்கின்ற தகவலும் கிடைத்துள்ளது.இவர்களை இந்த அமைப்போடு இணைத்துக் கொள்ளும் சந்தரப்பங்கள் அறிதாக இருந்தாலும்,அதனை ஏற்படுத்தும் ஒரு மகோன்னத சந்தர்ப்பமாக அமைப்பின் வருடாந்த மாநாடு அமையும்.
குறிப்பாக PUTTALAM ASSOCIATION QATTAR சட்ட திட்டங்களுக்கு அமைய முன்னெடுக்கப்படும் பணிகள்,கட்டாரிலும்,அதனை கடந்து குறிப்பாக இலங்கையில் எமது புத்தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பில் அங்கத்தவர்களை தெளிவு படுத்துவதன் மூலம்  இன்னும் இந்த அமைப்பின் செயற்பாடுகளை பல துறைகளில் விரிவுபடுத்தும் சிந்தணைகளும் எழுந்துள்ளன.அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் நிரல் படுத்ததப்பட்டுள்ளதையும் பாரக்க முடிகின்றது.கடந்த ஒரு வருட காலத்துல் புத்தளத்தின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகள் தொடர்பில் பெரும் பங்களிப்பினை பெக் அமைப்பு செய்துவந்துள்ளது.அதன் மூலம் அல்ஹம்துலில்லாஹ் பல சகோதரர்கள் நன்மை அடைந்துள்ளனர்.இது போன்று இன்னும் எத்தனையோ தேவைகள் நிறைந்த எமது மக்கள் இருக்கின்றார்கள் என்பதையும் இந்த அமைப்பு உள்வாங்கியுள்ளது.
குறிப்பாக கட்டார் நாட்டில் வாழும் புத்தளம் மக்களை ஒற்றுமைப்படுத்துவதன் மூலம் இன்னும் எத்தனையோ பணிகளை ஆற்றலாம் என்பது இந்த அமைப்பின் எதிர்பார்ப்பாகும்.அதனை அடைந்து கொள்ள கட்டார் நாட்டில் பல பிரதேசங்களில்,பல்வேறுபட்ட தொழில் துறைகளில் இருக்கும் எமது சகோதரர்களின் தியாகம்,பங்களிப்பு,ஆலோஷனை என்பது இந்த அமைப்பின் வளர்ச்சி என்பது புத்தளத்திற்கான மற்றுமொரு உள்ளீடாகும்.இந்த இலக்கினை அடைந்து கொள்ள இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (2014.06.06) மாலை 6.00 மணிக்கு கட்டாரில் அமைந்துள்ள பனார் மண்டபத்தில் நடை பெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் இந்த இலக்கினை அடைந்து கொள்ள முடியும்.
எனவே இவ்வாறானதொரு சமூகக்கடமையில் எம்மை அர்ப்பணிப்பதன் மூலம் நாமும் நாம் பிறந்து வாழ்ந்த எமது புத்தளம் மண்ணுக்கும்,மக்களுக்கும் ஆற்றும் கைங்கரியம் என்பதை உணர்ந்து கொள்வோம்.அதற்காக வேண்டிய அண்றைய தினத்தின் ஒரு சில மணித்தியாலங்களை செலவு செய்து இதனது வெற்றியின் பங்காளர்களாக நாம் மாறுவோம்.
-