Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, March 4, 2014

கஞ்சாவுடன் புத்தளம் மதுவரி அலுவலக உத்தியோகத்தர் கைது


இருவருக்கு கஞ்சா விற்பனை செய்ய முற்பட்டதாகக் கூறப்படும் புத்தளம் மதுவரி அலுவலக உத்தியோகத்தர் ஒருவரை முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமட்டாவ பகுதியில் திங்கட்கிழமை (03) இரவு கைதுசெய்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். 

இவரிடமிருந்து 250 கிராம் நிறையுடைய கஞ்சா பொதியொன்றையும்  20 கிராம் நிறையுடைய 07 கஞ்சா பொதிகளையும்  சிறிய தராசு ஒன்றையும்  கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர். 

No comments:

Post a Comment