மாணவர்கள் மத்தியில்
காணப்படும் திறமைகளை புடம் போடும் நிகழ்வாக விளையாட்டுப் போட்டிகள் அமைகின்றது.புத்தளம்
நகரில் நீண்டகாலமாக நடத்தப்பட்டுவரும் தனியார் ஆரம்ப பாடசாலைகளில் புத்தளம் பிரைமெரி
மற்றும் சைல்ட் கெயார் சென்டர் பாராட்டக் கூடியது என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார்.
புத்தளம் பிரைமெரி
மற்றும் சைல்ட் கெயார் சென்டர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி மற்றும் பரசளி்ப்பு
விழா என்பன இன்று புத்தளம் அநுராதபுரம் வீதி
2 வது மைல்கல்லில் அமைந்துள்ள டீசீ பூல் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
பாடசாலையின் பணிப்பாளர்
திருமதி ஷாமிலா நஸ்மி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்
என்.ரீ.தாஹிர்,புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் கிங்ஸ்லி பெர்ணான்டோ,புத்தளம் நகர சபை
முன்னால் தலைவர் எம்.என்.எம்.நஸ்மி உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
மேலும் பாராளுமன்ற
உறுப்பினர் அருன்திக பெர்ணான்டோ உரையாற்றுகையில் –
இன்று இந்த பாடசாலையின்
விளையாட்டுப் போட்டியின் ஏற்பாடுகளை பார்கின்ற
போது மாணவர்களுக்கு தேவையான ஆக்கத்தினையும்,ஊக்கத்தினையும் வழங்குவதை அவதானிக்க
முடிகின்றது.மாணவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளுக்கு களம் அமைத்து கொடுப்பது பாடனலைகளாகும்.வருமானத்தை
விட பிள்ளைகளுக்கு சிறந்த காலத்திற்கு தேவையான படிப்பினை வழங்குகின்ற போது நவீன உலகின்
கல்வி சவால்களுக்கு மாணவர்கள் இலகுவாக தம்மை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்றும்
அவர் கூறினார்.
No comments:
Post a Comment