சிறுவர்களின் உளவியல் தொடர்பிலான செயலமர்வும்,சிறுவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வொன்று வெள்ளம்பிட்டியில் இடம் பெற்றது.இந்த நிகழ்வில் சீபீஎஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கல்விமான் இல்ஹாம் மரைக்கார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
இங்கு உரையாற்றிய கல்விமான் இல்ஹாம் மரைக்கார் கூறுகையில் -
கொழும்பு மாவட்டத்தில உளவியல் ரீதியான ஆலோசனைகள் மற்றும் அது தொடர்பான கல்வி அறிவு வழங்கப்பட வேண்டியது.மிகவும் அவசியமானதாகும்.சிறு குழந்தைகள் வளர்ப்பில் அவர்களது மன இசைவாக்கத்தை சில பெற்றோர்களால் உணர்ந்து முடியாத நிலையில் பல்வேறு சம்பவங்கள் இடம் பெறுவதை நாம் அறிகின்றோம்.இவ்வாறான விபரீதங்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பில் போதுமான வழிகாட்டல்கள் காலத்தின் தேவையாகும்.
இவ்வாறான வழிகாட்டல் கருத்தரங்குகளை முன்னெடுப்பதற்கு அரசியல் ரீதியான பலம் இன்றியமையாதது.பாடசாலை மாணவர்களுக்கும்,ஏனைய துறையினருக்கும் உளவியல் தொடர்பான அறிவை வழங்க சில திட்டங்கள் நடை முறைபடுத்தப்பட வேண்டும்.
கொழும்பு மாவட்டத்தில் கல்வித் துறை சார் சமூகமொன்றை தோற்றுவிக்க பல்வேறு வேலைத்திட்டங்கள் எம்மால் தயாரிக்கப்பட்டுள்ளது.அவற்றை முன்னெடுக்க பொதுமக்களின் ஆதரவு இன்றியமையாதது என்றும் கல்விமான் இல்ஹாம் மரைக்கார் கூறினார்.
.jpg)
.jpg)

No comments:
Post a Comment