பாடசாலை மாணவர்களினதும்,இளைஞர்,யுவதிகளினதும்
கணணி அறிவினை மேம்படுத்தும் வகையில் துருக்கி நாட்டின் உறவுக்கான மற்றும் இணைப்பு
நாடுகளுக்குமான நிறுவனமான டிக்கா ஒரு தொகுதி கணணிகளை கையளித்துள்ளது.
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத்
பதியுதீன் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த கணணிகள் துருக்கி நாட்டின்
நிறுவனத்தின் பணிப்பாளர் பாபரஸ் அக்ககயாவினால் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான்
பதியுதீனிடம் கையளிக்கப்பட்டன.
மன்னார் மாவட்டத்தில் இளைஞர் சேவை மன்றத்துடன்
இணைந்து இந்த கணணி பயற்சிகளை வழங்குவதற்கு OHRD நிறுவனம் உடன்படிக்கையொன்றினை செய்துள்ளது.
3 மாதம்,6 மாதம் பயிற்சிகளாக
வழங்கப்படும்.யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தி திடட்டத்தில் மன்னார் மாவட்டம்
முன்னணியில் திகழ்வதாக தெரிவித்துள்ள மாகாண சபை உறுப்பினர் றிப்கான்
பதியுதீன்,எதிர்காலத்தில் தையல் மற்றும் இன்னோரன்ன பயிற்சிகளை பிரதேச
இளைஞர்,யுவதிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும்
கூறினார்.
இந்த நிகழ்வில் துருக்கி நாட்டின் பிரதி
பஹ்ரி,புராக்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரின் ஆலோஷகர் எம்.சவாஹிர்,தேசிய இளைஞர்
சேவைமன்ற மன்னார் அலுவலக பொறுப்பாளர் பொஸ்கோ உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment