Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, September 28, 2013

வாக்குகளால் தோற்றுப் போகும் தமிழினம் -ஓர் பார்வை


-    அக்கறையான் -
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்றே கொள்ளும் என்னும் பழமொழியொன்றை ஞாபகத்படுத்துவது பொருத்தமாகும்.நடை பெற்று முடிந்த தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு அறிக்கைகளும்,தமது சுய விமர்சனங்களும் அலங்கரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழினத்தின் ஒற்றுமைக்காக போட்டியிட்ட வேட்பாளர்கள் தம்மை தாமே தாக்கியும்,தமது அலுவலங்களை சேதமேற்படுத்தியும்,சகோதர தமிழர்களையே காயப்படுத்தும் படலம் தற்போது ஆரம்பமாகிவிட்டதை காணமுடிகின்றது.


தமிழ் மக்களுக்கு விமேசாசனம்,விடிவும் தேவையென்பதாகவும்,மாகாண சபையில் அமைச்சுப் பதவிகளுக்கு அப்பால் தமிழின் உரிமைகளுக்கு உயிர் கொடுப்பதாக கூறிய வடமாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டவர்கள்,மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள வீடுவீடாகவும்,மேடைகளில் தெரிவித்த போதும்,தற்போது அது உருமாறி பதவி ஆசையினை ஏற்படுத்தியுள்ளதை காணமுடிகின்றது.அரசியல் வாதிகளில் சிலர் வியாபாரிகள் என்ற தற்போதைய அரசியல் ஆய்வாயளர்களின் கருத்துக்களாக இருப்பது உண்மையானது என தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.இருந்த போதும் காலம் கடந்த பின் ஏற்படும் ஞானம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் போன்றது என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
காலகாலம் அழிவுகளை ஏற்படுத்திய தரப்புக்களுடன் நெருக்கத்தை வைத்துவந்த இந்த கட்சிகள் இன்று ஜனநாயத்தை்  ஏற்றுக் கொண்டு அரசியல் பிரவாகத்தில் நுழைந்த போதும்,மக்கள் மத்தியில் சென்று பிரிவினைவாத கருத்துக்களையே முன் வைக்கின்றதை காணமுடிகின்றது.தற்போது வடமாகாண சபை தேர்தல் முடிவடைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு வடமாகாண ஆளுநரிடம் தமது பெரும்பான்மை பலத்தை எழுத்து மூலமாக அறிவிக்க வேண்டும்.இந்த அறிவிப்பை வெளியிட முடியாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று மீண்டும் யாழில் தமது கூட்டத்தை கூடவுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் அமைச்சுப் பகிர்வு தொடர்பிலும்,போனஸ் ஆசனம் தொடர்பிலும் கருத்து மோதல்கள் இடம் பெற்றுவருகின்றன.இதனது வெளிப்பாடாக அண்மையில் மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு நான்காவது இடத்தை பெற்ற சார்ள்ஸ் என்பவர் தமக்கும் மாகாண சபை உறுப்பினரை் பதவி தரப்பட வேண்டும் என்று கோறி மன்னார் நகரில் அமைந்திருந்த டெலோ அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் தாக்குதல் சம்பவமொன்றில் ஈடுபட்ட செய்தியினையும் நாம் வாசித்தோம்.குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை இயக்குபவர் அந்த கட்சியின் தலைவர்இரா.சம்பந்தன் அய்யா அல்ல என்பதை வட மாகாண சபை தேர்தல் முடிவு காட்டியுள்ளது.அதறை்கு பின்னால் இருப்பர் மதகுருமார் ஒருவர்,இவரது நிகழ்ச்சி நிரலில் பல்வேறு நாகரீகமான செயற்பாடுகள் தேர்தலின் முன் தினத்திலும்,தேர்தல் தினத்திலும் அரங்கேறியமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன்..இதன் மூலம் தெளிவான ஒரு விடயத்தை காணமுடிகின்றது.வடக்கில் முஸ்லிம்களை முழுமையாக துடைத்தெறிய வேண்டும் என்பதில் எவ்வாறு அக்கறை கொண்டுள்ளார்களோ,அதே போன்று இந்த சமயத்தினரும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுமுள்ளனர்.இதன் மூலம் வெளிப்படையான உண்மை என்னவெனில் வடக்கில் சிறுபான்மை சமூகத்தின் எதிர்காலத்துக்கு இந்த மாகாண சபையின் அதிகாரங்கள் அச்சுறுத்தலாகும் என்பது மட்டும் உண்மைாகும்.
இவ்வாறான நிலையில் அழிந்து போன தமிழினத்தின் விமோசனத்திற்கும்,உயர்ச்சிக்கும் உரிமை பெற்றுக் கொடுக்க புறப்பட்ட கூட்டமைப்பினர்,இன்று தமது கட்சிக்குள் குத்துவெட்டுக்களை சந்திக்க நேரிட்டுள்ளனர்.அரசாங்கத்தை மக்களை ஆதரித்தால் பிளவுகளும்,அழிவுகளும் ஏற்படும் என்று உரத்து முழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தீராத துயரத்தினை இந்த மாகாண சபை மூலம் தமிழ் மக்களுக்கு கொடுக்கும் என்பது மட்டும் உண்மையாகும்..
வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றி பெற்றவருக்கு அமைச்சுப் பதவி வேண்டும் என்று வேஷ்டியினை வரிந்து கட்டிக் கொண்டு காத்திருக்கும் வேட்பாளர்கள்,எது  குரங்கு அப்பம் பகிர்ந்தளித்த கதை போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண தலைமைத்துவம் தான்
இனிமேல் தீர்மாணம் எடுக்க வேண்டும் என்ற கோஷத்தை ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் வடமாகாணத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை  பின்பற்ற அணி திரண்டுள்ள வன்னி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,இரா.சம்பந்தனின் தலைமைக்கு எதிராக எதிர்காலத்தில் செயற்படப் போகின்ற விடயமும் மெல்ல கசிந்துள்ளது.
எது எவ்வாறாக இருந்த போதும்,இத்தனை அழிவுகளையும் தமிழினத்துக்கு கொண்டுவந்து தந்த இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினையே ஆதரிப்பதன் பின்னணி தான்,வடக்கில் புதிய தமிழ் தேசிய முன்னணியினை உருவாக்க இடப்படும் ஆரம்ப அத்திவாரமாகும்.


No comments:

Post a Comment