நடைபெற்று
முடிந்த வடமாகாண சபை தேர்தலின் பின்னரான முடிவுகளை வைத்து பல்வேறுபட்ட கருத்துக்களையும்,விமர்சனங்களையும்,கட்சிகளும்
தனிப்பட்ட அமைப்புக்களும் வெளியிட்டுவரும் நிலையில் அதற்கு அப்பால் சென்று சமூகத்தின்
தேவைப்பாடுகள் குறித்து நோக்க வேண்டியது காலத்தின்
தேவையாகும் என்பதை கவனத்திற் கொண்டவனாக இந்த கட்டுரையினை எழுதுகின்றேன்.
கடந்த
25 வருடங்களின் பின்னர் வடக்கில ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டுள்ள செய்தியினை கடந்த
ஒரு மாதகாலமாக கேட்கக் கூடியதாக இருந்தது.அதற்கு முன்னர் பயங்கரவாதிகளினதும்,தமிழினவாதிகளினதும்
ஆட்சியே இடம் பெற்றுவந்துள்ளதை தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும்
அதற்கு பக்கபலமாக அறி்க்கைகளை விட்டுவரும் மனோ கணேஷன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
போன்ற கட்சிகளை காணமுடிகின்றது.3 தசாப்தம் வடக்கில் இடம் பெற்ற ஆட்சிகளில் அனைத்தையும்இழந்த
சமூகம் ஒன்று இருக்குமெனில் அது வடமாகாண முஸ்லிம் சமூகம் என்பதை தற்போதைய தேர்தல் முடிவுகள்
வெளிப்படுத்தியுள்ளதை கூறலாம்.அரசாங்கம் வடக்கு மக்களை அச்சுறுத்துவதாகவும்,அவர்களது
ஜனநாயக உரிமைகளை இல்லாமல் செய்வதகாவும் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவந்த போதும்,இந்த கதை
பொய்யென்பதை அந்த நாடுகள் தேர்தலின் பின்னரான முடிவுகளை தொடர்ந்து வெளியிட்டுள்ள அிற்ககைகள்
சான்றாகவுள்ளது.
இந்த
நிலையில் இனிமேலும் இவர்களது ஆட்டங்கள் பலிக்காது என்பதை உணர்ந்து கொண்டதன் பின்னர்,இனி
எதை செய்யலாம் என மந்திர ஆலோசனகைள் நடத்திவரும் செய்திகளும் வெளியாகியுள்ளது.தற்போதைய
வடமாகாண சபை தேர்தல் முடிவுகள் தமிழ் தேசியத்துக்கு கிடைத் வெற்றியென்றும்,இதனையடுத்து
அவர்களது மாகாண சபையில் வடக்கையும்,கிழக்கையும் இணைக்கும் தீர்மாணங்களை கொண்டுவரப்
போவதாகவும்,தற்போது வடமாகாண சபைக்கு மூன்றிலெண்டு அருதி பெருமானம் இருப்பதாகவும் கூறிவருகின்றனர்.வடக்கையும்,கிழக்கையும்
இணைப்பதன் மூலம் மீண்டும் முஸ்லிம்களை சிறுபான்மையாக்கிவிடலாம்,தமது புலிக் கொள்கையினை
திணித்து மற்றுமொரு ஆட்சியினை ஏற்படுத்தலாம் என கனவு காணும் இந்த சக்திகளுக்கு ஒட்சிசன்
கொடுக்கும் வாழ்த்துக்களை முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்த பாகாவலன் என்று தம்பட்டம்
அடிக்கும் முஸ்லிம் காங்கிரசும் வெளியிட்டுள்ளது கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலத்தை
தவிடு பொடியாக்கும் செயற்பாட்டின் புதிய ஆரம்பம் என்றே கூற வேண்டும்.ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை பொருத்தவரையில் அவருக்கு இருமுகம் இருக்கின்றது.முதலாவது
சர்வதேச அரசு எதிர் நாடுகளின் தொடர்பும்,அதனுாடாக அவரது வளர்ச்சியும்,இலங்கைக்குள்
பொருத்தமில்லாத தீர்மாணங்களை எடுக்கும் நடை முறையென வகுக்கலாம்.முதலாவது வகையில் பல்வேறு
விடயங்கள் இருக்கின்றன.அயல் நாடான இந்தியாவினன் ஜெயலலிதா அரசின் நிகழ்ச்சி நிரலுடனும்,நோர்வேவுடனான
நெருக்கமுமாகும்.இலங்கைக்குள் ஏற்கனவே பிரபாகரனுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பிலான
முஸ்லிம் சமூகத்தினை காட்டிக் கொடுப்பு செய்யும் ஒரு வகையான தந்தி செயற்பாடுகள் எ்னபனவற்றை
நடந்து முடிந்த தேர்தலின் பின்னர் வெளியாகும் அவரது பேச்சுக்களின் வெளிப்பாட்டு நம்பகமற்ற
தன்மையினை காணமுடிகின்றது..
வடக்கில்
மன்னார்,வவுனியா,மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தேர்தல் முடிவுகளில் இருந்து பார்கின்ற
போது அந்த கட்சியின் நிகழ்ச்சி நிரல் என்வென்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.மன்னார்
மாவட்டத்தில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்பைடயில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
15 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதுடன்,மு.காங்கிரஸ் 5 ஆயிரத்துக்குட்பட்ட
வாக்குகளையே பெற்றுள்ளது.இந்த நிலையில் கட்சியின் தலைவர் ஹக்கீம் மற்றும் செயலாளர்
நாயகம் ஹஸன் அலி போன்றவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கும் வன்னியின் அதிகாரமுள்ள
அமைச்சர் றிசாத பதியுதீன் அவர்களின் அடக்கு முறைளையும் மீறி மக்கள் தமக்கு வாக்களித்துள்ளனர்
என்ற கருத்து முற்றிலும் பிழையானது என்பதை அவருக்கு புரிய வைக்கவிரும்புகின்றேன்.இதனை
ஒப்பீட்டு அடிப்படையில் நோக்கின் புலிகளின் அந்த பாசிசக் கொள்கையினை ஆதரித்து மன்னார்
மாவட்டத்தில் உள்ள 33 ஆயிரம் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளதை
அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள போது,அதே மாதிரியான ஒரு ஒத்த போக்கினை ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸூக்கு வாக்களித்துள்ளவர்கள் கடைப்பிடித்துள்ளனர்.அவர்களது நோக்கம் வடக்கில்
முஸ்லிம் எதிர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியே தேவையென்பதை பிரகடனப்படுத்தியுள்ளனர்.மன்னார்
மாவட்டத்தில் அ.இ.ம.காங்கிரஸ் கட்சி ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது,இரண்டாவது ஆசனத்தை 64
வாக்குகளாலேயே இழந்துள்ளதை பார்க்கமுடிகின்றது.அடுத்து வவுனியா மாவட்டத்தின் முடிவுகளை
நோக்கின் அங்கும் இரு முஸ்லிம் பிரதி நிதித்துவம் இழந்து போவதற்கு கடும் பிரயத்தனங்களை
இந்த முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ளதை காணமுடிகின்றது.ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்
இருந்து தற்போது தெரிவாகியுள்ள இரு சிங்கள சகோதரர்கள் பெற்ற வாக்குகள் 5 ஆயிரத்குதுக்கும்
குறைவானது,அதே போன்று அந்த அணியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில்
போட்டியிட்ட விருப்புவாக்குகளின் எண்ணிக்கையானது 4 ஆயிரத்துக்கும் சற்று குறைவு,ஆனால்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற கட்சிக்கான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1991 மட்டுமே,அப்படியென்றால்
அந்த வாக்குகளும் முஸ்லிம் இரு வேட்பாளர்களுக்கும் கிடைத்திருந்தால் வவுனியாவிலும்
எமது பிரதிநிதித்துவம் உறுதியப்படுத்தப்பட்டிருக்கும்,இந்த அநியாயயத்தை செய்துவிட்டு
மு.காங்கிரஸ் பிழையான தகவல்களை வெளியி்ட்டுவருகின்றது.அதேபோல் முல்லைத்தீவிலும் மு.காங்கிரஸ்
வேட்பாளர்களை போட்டு 200 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன்
தலைமையிலான அ.இ,மக்கள் காங்கிரஸ் 1 ஆசனத்தை பெற்றுள்ளது.
இதனடிப்படையில்
மன்னாரில் 1 ஆசனமும்,வுவனியாவில் ஒரு ஆசனமும்,முல்லைத்தீவில் ஒரு ஆசனத்தையும் அமைச்சர்
றிசாத் தலைமையிலான அ.இ.மக்கள் காங்கிரஸ் பெற்றுள்ளது.ஆனால் மு.கா.1 ஆசனத்தை மட்டும்
பெற்றுள்ளது.இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் வன்னியில் வீழ்ச்சி கண்டுள்ள போதும்,தான்
கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கருத்துக்களை வெளியிட்டுள்ளது.வடக்கில் முஸ்லிம்களின்
மீள்குடியேற்றத்தை விரும்பாத கட்சியாகவும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு
ஒப்ப செயற்படும் ஒரு குழுவாக இந்த முஸ்லிம் காங்கிரஸினர் இருப்பதை மக்கள் உணர்ந்து
கொள்ள வேண்டும்.கடந்த பொதுத் தேர்தலில் அமைச்சர் றிசாத் தலைமையில் போட்டியிட்டு இரு
பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றதுடன்,இந்த தேர்தலில்
3 பிரதி நிதித்துவத்தை பெற்றுள்ளதுடன்,4 வது பிரதி நிதித்துவத்தினை ஒரு சில வாக்குகளால்
இழந்துள்ளது என்பதை கவனத்திற் கொள்வதுடன்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது அரசியல்
வளர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது என்பதை பிழையாக அறிக்கைவிடும் கட்சிகளும்,அமைப்புக்களும்
புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment