வடமாகாண
சபை தேர்தல் முடிவடைந்து சில மணித்தியாலயங்கள் செல்வதற்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு
அரசாங்க கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மன்னார்
மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில் இன்று மாலை வேளை
தாராபுரம் கிராமத்துக்குள் புகுந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடத்திய தாக்குதலில்
இருவர் காயங்களுக்குள்ளானதாகவும், 2 வாகனங்கள் மற்றும் 3 முச்சக்கர வண்டிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
ஜக்கிய
மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றி பெற்ற அமைச்சர் றிசாத் பதியுதீனின் சகோதரர் றிப்கான்
பயுதீன் தமது சொந்த கிராமமமான தாராபுரத்துக்கு தமது ஆதரவாளர் சகிதம் வந்த போது,ஏற்கனவே
கற்கல் மற்றும் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்தும் வகையில் நின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின்
கும்பல்கள் இவர்கள் மீது தாக்கியுள்ளனர்.
இதனால்
காயமுற்ற இருவரான அனஸ்,அஸ்கர் ஆகியோர் மன்னார் வைத்தியசாலையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நிலைமை
குறித்து தகவல் கிடைத்த மன்னார் பொலீஸார் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளதுடன் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
மன்னார்
மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களையும்,ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
1 ஆசனத்தையும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.இந்த நிலையில்
தமிழ் தேசிய கூட்டமைப்பு மன்னார் அடம்பன் உள்ளிட்ட பல கிராமங்களில் அரசாங்கத்தினை ஆதரித்தவர்களின்
வீடுகளுக்குள் பட்டாசு கொளுத்தியதுடன்,சில வீடுகளுக்கு முன்னால் டைனமோர் வெடிப் பொருட்களை
வெடிக்கச் செய்து மக்களை அச்சுறுத்தலுக்குள்ளாகிவருகின்றனர்.
ஜனநாயக
ரீதியில் மக்கள் இம்முறை தமது வாக்குகரைள அளித்துள்ளமையினால் மன்னார் மாவட்டத்தின்
வாக்குப் பதிவு 70 சதவீதம் வரை சென்றிருக்கும் நிலையில் மீண்டும் மாவட்டத்தில் அச்ச
சூழ்நிலையினை ஏற்படுத்தவென தமிழ தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக மன்னார் மாவட்ட இன
நல்லுறவுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்யொன்றில்
தெரிவித்துள்ளது.
அதே
வேளை இந்த நிலை மாவட்டத்தில் தொடரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து
மக்கள் அவதானமாக இருக்குமாறும அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment