Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, July 29, 2013

யாழ் சிராஸ் வெற்றிலை சின்னத்தில் போட்டி

வடமாகாண சபைக்கு ஆளும்கட்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளராக எம்.சிராஸ் போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே சிராஸ் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தெரிவு செய்யப்பபட்டிருந்த போதும்,சில தடைகள் அவருக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது.இந்த நிலையில் யாழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள சிராஸை ஆளும் கட்சியின் பட்டியிலில் நிறுத்த வேண்டும் என்பதில் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனுடன்,யாழ் மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள்,உலமாக்கள்,புத்தி ஜீவிகள்,பள்ளி பரிபாலன சபையினர்,வர்த்தக சமூகத்தினர் என பலரும் தொடர் பேச்சுக்களை நடத்திய நிலையிலேயே,சிராஸின் பெயரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.



அதே வேளை எம்.சிராஸ் இன்று மாலை வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த செய்தி கேள்வியுற்ற சிராஷின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் தில்லையடி பிரதேசங்களில் பட்டாசு கொளுத்தி தமது மகிழச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment