
அறுவைச் சிகிச்சை செய்யும் போது புற்றுநோயால் பாதிக்கப் பட்ட திசுக்களை மாத்திரம் துல்லியமாக அகற்றக் கூடிய புதிய வகைக் கத்தி உபகரணம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதுவரை மருத்துவ உலகில் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு என உபயோகப் படுத்தப் பட்டு வந்த மின்சாரத்தால் இயங்கும் கத்தி போன்ற கருவியால் வெற்றிகரமாக புற்று நோய்த் திசுக்களை மாத்திரம் அகற்றுவது என்பது முடியாத காரியமாக இருந்து வந்தது.
சிகிச்சை முடிந்த பின் நோயாளிக்கு மறுபடியும் புற்று நோய் தாக்கும் அபாயமும் இருந்தது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள கத்தியால் அறுவைச் சிகிச்சை செய்தால் புற்றுநோய் மறுபடி தாக்கும் அபாயம் பன்மடங்கு குறையும் என நிரூபிக்கப் பட்டுள்ளது. இக்கருவி மூலம் சில விநாடிகளுக்குள் புற்றுநோய்த் திசுக்களையா அல்லது ஆரோக்கியமான திசுக்களையா நாம் வெட்டுகின்றோம் என உணர்ந்து மருத்துவர்கள் எச்சரிக்கப் படுகின்றனர்.
இலண்டனில் அமைந்துள்ள இம்பீரியல் கல்லூரியில் இக்கண்டுபிடிப்பு நிகழ்த்தப் பட்டதுடன் இது தொடர்பான தகவல் விஞ்ஞான நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளன. மேலும் சோதனை அடிப்படையில் 91 புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களின் திசு மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டு இக்கருவியின் தரம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப் பட்டுள்ள இக்கருவியின் விலை 250000 பவுண்ட்ஸ் ஆகும். i knife எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணம் சிகிச்சையின் துல்லியத்தை அதிகரிப்பதால் 2 ஆவது முறை புற்று நோய் சிகிச்சை செய்ய வேண்டிய தேவையைப் பெருமளவு குறைத்து விடுகின்றது என விஞ்ஞானிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment