வடக்கில்
ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை மேலும் அதிகரிப்பதற்கு மற்றுமொரு சந்தர்ப்பம் ஜக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு வடமாகாண சபை தேர்தலில் ஆதரவு வழங்குவது என்று அகில
இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
வடமாகாண
சபைக்கு மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பு மனுவினை இன்று மாலை மன்னார் மாவட்ட தேர்தல்
தெரிவத்தாட்சி அதிகாரி தேசப்பிரியவிடத்தில் தாக்கல் செய்ததன் பின்னர் மாவட்ட செயலகத்துக்கு
முன்பு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
கூறினார்.
மேலும்
அவர் தகவல் தருகையில் கூறியதாவது –
கொடிய
யுத்தத்தால் எமது மாவட்டம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.அதனை நாம் கட்டியெழுப்ப
வேண்டும்.அதற்கு மக்கள் தமது ஆணையினை மீண்டும் ஒரு முறை வழங்க வேண்டும்.நீங்கள் வழங்கும்
ஆதரவின் மூலம் நாம் இன்னும் பாரிய அபிவிருத்திகளை கொண்டுவர முடியும் என்றும் அமைச்சர்
றிசாத் பதியுதீன் கூறினார்.
No comments:
Post a Comment