Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, July 28, 2013

ஆளும் கட்சியுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை வன்னியில் நிறுத்தும்








எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த  வேட்பாளர்களுக்கான நேர் முகப்பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை மாலை   அமைச்சர் றசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது உத்தியோகபூர்வ வேட்பாளர்களின் விபரங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அமைச்சர் றிசாத் பதியுதீன் அறிவித்திருந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தமது  விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர்

இந்த நிலையில் நாளை திங்கட்கிழமை  அகில இலங்கை  மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்கள் பொது ஜன ஜக்கிய முன்னணியின் பட்டியலில்  கையொப்பமிடவுள்ளதா க தெரியவருகின்றது.

அதே வேளை அ.இ.ம.காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பு ஒன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்றுள்ளது.இதில் பேராதானை பல்கலைக்கழக அரசியல் துறை விரிவுரைாயளர் கலாநிதி அனீஸ்,மன்னார் மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஜூனைட்,வுனியா நகர சபை  முன்னால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆரிப்>முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய யஹியான்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், உட்பட பலரும் இதன் போது தமது கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment