Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, June 18, 2013

பாலியல் பலாத்காரம் செய்த தந்தை தலையை துண்டித்தார் இளம் பெண்

பப்புவா நியூ கினியா நாட்டை சேர்ந்த இளம் பெண், தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையின், தலையை துண்டித்துள்ளார். பசிபிக் கடலில், இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள தீவு பப்புவா நியூ கினியா. இங்குள்ள ஒரு கிராமத்தில், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வெளியே சென்றிருந்த நேரத்தில், தனது மூத்த மகளை, தந்தை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

மீண்டும் இந்த முயற்சியில் ஈடுபட முயன்ற தந்தையின் தலையை, 18 வயது மகள், அரிவாளால் வெட்டினார். இதில் தந்தை பலியானார். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், இளம் பெண்ணை கைது செய்ய முயன்றனர்.
ஆனால், கொடுர தந்தையை தீர்த்து கட்டிய மகளை கைது செய்ய, அந்த கிராமத்தினர் அனுமதி மறுத்து விட்டனர். கிராம பெரியவர்களும், பாதிரியாரும் கேட்டு கொண்டதற்கிணங்க, அந்த பெண் கைது செய்யப்படவில்லை.
Click Here

No comments:

Post a Comment