திருகோணமலை மாவட்டத்தில்
கிண்ணியா பிரதேசத்தில் விசேட அதிரடி படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எற்பட்ட
முறுகல் நிலையினை தொடர்ந்து பிரதேசத்தில் பதற்ற நிலையேற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இன்று மாலை
5.30 மணியளவில் விறகு வெட்டிக் கொண்டுவந்த சில வண்டிகளை வழி மறித்த வனபரிபாலன திணைக்கள
அதிகாரிகளும் விசேட அதிரடிப் படையினரும் அவர்களை பொலீஸாரிடம் ஒப்படைப்பதற்கு முயற்சித்த
போது,பொதுமக்கள் பொலீஸாரிடத்தில் தம்மை விடுவிக்குமாறு தெரிவித்த போது ஏற்பட்ட சம்பவத்தினையடுத்து,பாதுகாப்பு
தரப்பினரால் துப்பாக்கி சூடு ஆகாயத்தை நோக்கி நடத்தப்பட்டதில் கிண்ணியா குட்டி கராச்சி
பகுதியில் உள்ள ஜூம்ஆ பள்ளி மீதும் துப்பாக்கி ரவைகள்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரதேசத்தில்
பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.அதே வேளை விறகு கரத்தைகளை பொலீஸார் எடுத்துச் செல்ல முற்படுவதால்.தற்பாதும்
அப்பிரதேசத்தில் பதற்றம்நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து
கிண்ணியா நகர சபை தலைவர் சட்டத்தரணி ஹில்மி மஹ்ரூப்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் தொடர்பு கொண்டு விடயத்தை தெரிவித்ததையடுத்து,பொலீஸ்
மா அதிபர் மற்றும் பிராந்திய பொலீஸ் பிரதி மா அதிபர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு பிரதேசத்தில்
மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும் கேட்டுள்ளார்.
தற்போதைய பதற்ற
நிலையினை தணிக்கும் வகையில் கிண்ணியா உலமா சபையினர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக
பிரதி நிதியொருவர் சற்று முன்னர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment