ராமநாதபுரம்: இலங்கை நோக்கி 1,000 படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி செல்லும் போராட்டத்தை, ராமேஸ்வரம் மீனவர்கள் வாபஸ் பெற்றனர்.
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 57 பேரை விடுவிக்க கோரி, ஜூன் 22ல் ராமேஸ்வரத்தில் இருந்து 1,000 படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி, இலங்கைக்கு செல்லும் போராட்டத்தை மீனவர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில், மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. "விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றதாக' மீனவர் சங்க தலைவர் போஸ் தெரிவித்தார்.


No comments:
Post a Comment