Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, June 19, 2013

அமெரிக்க நீதிபதியாக இந்தியர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் நியமனம்


அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் அமெரிக்காவில் பிரபல வழக்குரைஞராக பணியாற்றி வந்தார்.



அதன் பின் கடந்த 2012 ம் ஆண்டு யூனில் ஸ்ரீநிவாசனை டி.சி.சர்க்யூட் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்தார்.
இப்பதவிக்கு அமெரிக்க நாடளுமன்ற மேலவையான செனட் ஒப்புதல் அளிக்க வேண்டி இருந்ததால், அவரது நியமன உத்தரவு பரிசீலிக்கப்படாமல் ஜனாதிபதிக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனை ஒபாமா நியமித்தார். இதற்கு செனட் 97/0 என்ற வாக்குகளின் அடிப்படையில் ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது.
இந்த வாக்குகளின் அடிப்படையில் அவர் அமெரிக்க நாட்டின் இரண்டாவது அதிகாரம் மிக்க நீதிமன்றமான டி.சி.சர்க்யூட் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றார்.
இதற்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் நிருபமா ராவ் விருந்தளித்தார்.
அப்போது ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் பேசுகையில், நான் அமெரிக்கக நீதிபதியாக பதவியேற்றது எனது குடும்பத்துக்கும் இங்குள்ள இந்திய சமூகத்திற்கும் கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். நீங்கள் அளித்த ஆதரவால் நான் மட்டுமல்ல நாமும் சேர்ந்து சாதித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து இந்தியத் தூதர் நிருபமா ராவ் பேசுகையில், ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் தன்னுடைய இளம் வயதில் இதனை சாதித்துள்ளார்.
இவர் மேலும் பல சாதனைகளைப் படைத்து விரைவில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்பார் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment