
இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"அண்மைக்காலமாக நாட்டில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகள் சகலரையும் பாதிப்புக்குள்ளாக்கியதோடு நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது.
இந்த நடவடிக்கைகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இம்சைப்படுத்தியதுடன் அவர்களது அன்றாட வாழ்வையும் பெரிதும் பாதித்தது. ஆபத்தான நிலைமைகளில் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குனூத் அந்நாஸிலாவை ஓதிவந்தார்கள்.
அதன் ஒளியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன நிலைமையைக் கவனத்திற்கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களினதும் நாட்டினதும் நிலமை கருதி ஐந்து நேர தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை ஒதுமாறு அனைத்து முஸ்லிம்களையும் வேண்டியிருந்தது.
ஜம்இய்யாவின் வழிகாட்டலை ஏற்று நம்மக்கள் சுன்னத்தான நோன்புகளை நோற்று பிரார்த்தனை செய்து வந்ததோடு குனூத் அந்நாஸிலாவையும் தமது தொழுகைகளில் ஓதி வந்தனர். தற்பொழுது குனூத் அந்நாஸிலாவைத் தொடர வேண்டிய அவசியம் உணரப்படாமையினால் அதனை நிறுத்திக் கொள்ளலாம் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக்கொள்கிறது".
No comments:
Post a Comment