Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, April 2, 2013

'பஷன் பக்' தாக்குதல்; சந்தேகநபர்கள் விடுதலை

பிப்பிலியான பஷன் பக் களஞ்சியசாலை தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்ப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


இந்த தாக்குதல் தொடர்பில் மூன்று தேரர்கள் உட்பட்ட 17 பேர் சந்தேகத்தின் பேரில் மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் இன்று செவ்வாய்க்கிழமை நுகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது இவர்கள் அனைவரையும் எச்சரித்த பின்னர் நீதவான் விடுதலை செய்தார்.

தாக்குதல் தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து மேற்கொள்ளத் தேவையில்லை என பசன் பக் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இதன் பின்னர் இந்த வழக்கு விசாரைணைகளை நீதவான் முடிவுக்கு கொண்டுவந்ததுடன் சந்தேகநபர்களையும் விடுதலை செய்தார்.

பிப்பிலியான பஷன் பக் களஞ்சியசாலை மீது கடந்த வியாழக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment