வணிக நிறுவனம் மீதான தாக்குதல்: பொதுபல சேனா மறைமுக தூண்டுதல்: ஹக்கீம்
கண்டியில் நடந்த கூட்டமொன்றில் பொதுபல சேனா அமைப்பின் பௌத்த பிக்கு
ஒருவரே முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனம் ஒன்றின் மீதான
தாக்குதலுக்கு மறைமுகமாக தூண்டியதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்
குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு சிங்களப் பெண்ணை அந்த நிறுவனத்தில் பலவந்தப்படுத்தியதாக பொய்க்குற்றஞ்சாட்டியே அவ்வாறு அவர் தூண்டியதாக ஹக்கீம் கூறியுள்ளார்.
இதற்கு
அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சிறுபான்மை மக்கள் மீது ஒரு
உதிரிக் கும்பல் இலக்கு வைத்து தாக்குவதற்கு அரசாங்கமே இடமளித்துள்ளதாக
அமைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுபல சேனாவின் கட்டடம்
ஒன்றை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திறந்து வைத்ததை கடுமையாக
விமர்சித்துள்ள அமைச்சர் ஹக்கீம் அந்தக் கூட்டத்தில் அவரைக் கலந்துகொள்ள
அனுமதிக்க வேண்டாம் என தான் முன்னதாகவே ஜனாதிபதியை கேட்டிருந்ததாகவும்
கூறியுள்ளார்.
அதன்படி பாதுகாப்புச் செயலாளர் அந்த கூட்டத்தில்
கலந்துகொண்டதே, பொதுபல சேனா அமைப்பு இன்று அசுர தாண்டவம் ஆடுவதற்கு
தூண்டுகோலாக அமைந்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
No comments:
Post a Comment