இலங்கையில் வாழும் பௌத்த சிங்கள மக்களின் பாதுகாவலன் போன்று, தமிழ்,
முஸ்லிம் மக்களின் பாதுகாவலன் தான் எனவும். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க
வேண்டியது தனது கடமை எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எந்த
இனத்திற்காகவது இடையூறுகளோ, தொந்தரவுகளோ ஏற்பட்டால், அதனை தடுக்க சட்டத்தை
செயற்படுத்த பின்நிற்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பேருவளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை
என்பது 30 வருடங்களுக்கு மேல் துன்பப்பட்ட நாடு. அவ்வாறான யுகத்தை
எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படுத்திக் கொடுக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment