Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, April 17, 2013

ஆப்கானிஸ்தானில் சாலையோரம் குண்டுவெடிப்பு : 7 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அரசு மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிராக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹெராட் மாகாணத்தில் ஷிந்தாந்த் நகரில் நேற்று சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் டிராக்டரில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஒருபுறம் முயற்சி நடந்து வரும் வேளையில், பொதுமக்களின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment