Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, February 9, 2012

கல்முனை மீனவர்கள் இந்தியாவிலிருந்து நாடு வந்தடைந்தனர்



வாழைச்சேனை கடற்பிரதேசத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போனதாக கூறப்பட்ட கல்முனை மீனவர்கள் 4 பேரும் இந்தியாவின் கண்ணியா குமாரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இன்று இலங்கையை வந்தடைந்தனர்.


ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற இவர்கள் தமது படகுக்கான எரிபொருள் முடிவடைய கடலில் 16 தினங்கள் தத்தளித்துக் கொண்டிருநத்த போது,இந்தியாவின் கண்ணியா குமாரி பிரதேச மீனவர்கால் காப்பற்றப்பட்டு இந்திய பொலீஸாரிடம் ஒப்படைத்ததன் பின்னர்,அவர்கள் இலங்கை துாதரகத்தினரிடம் இவர்களை பாரப்படுத்தினார்.

இம்மீனவர்கள் காணாமல் போனது குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்,அமைச்சர் றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து அமைச்சர் இந்தியாவிலுள்ள இலங்கை துாதகர அதிகாரிகளுடன்  பேச்சுக்களை நடத்தியன் விளைவாக இவர்கள் இன்று இலங்கையை வந்தடைந்தனர்.

இவ்வாறு வருகைத் தந்த ஏ.றஹீம்,இஸ்மா லெப்பை,அன்வர்,பஷீர் ஆகிய மீனவர்களை அமைச்சர் றிசாத் பதியுதீன் விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்று அவர்களது குடும்பத்தினரிடம் பாரப்படுத்தினார்.
இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.122 விமானத்தில் இன்று காலை 11.35 க்கு இந்த மீனவர்கள் இலங்கையினை வந்தடைந்தனர்.



No comments:

Post a Comment