![]() |
மறிச்சுக்கட்டி மு.வித்தியாலயம் |
வடக்கில் மீள்குடியேறியுள்ள கிராமங்களின் கல்வி மேம்பாடுகள் குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கொண்டச்சி பகுதியில் 1 கோடி 30 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக்கட்டிடங்களை திறந்து வைக்கும் போது மேற்கண்டவாறு கூறினார்.
தற்போது இக்கிராமங்களில்ஆயிரக்கணக்கான மக்கள் மீள்குடியேறியுள்ள போதிலும்,அவர்களுக்கான இருப்பிடங்களின் பிரச்சினைகள் பெரிதாக உள்ளது.அதனை தீர்க்க நடவடிக்கையெடுக்கும் போதுஈஎமக்கெதிரான இனவாத பேச்சுக்களை வெளியிட ஆரம்பிக்கின்றனர்.
ஆசிரிய நியமனங்களின் போது இடம் பெயர்ந்து மீள்குடியேறியுள்ள கிராமங்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்கி நியமனங்களை வழங்குமாறும் பணிப்பாளர்களிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,வலயக் கல்வி பணிப்பாளர்.எம்.எம்.சியான்,முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய எஹியான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்காக பாடசாலை கற்றல் உபகரணங்களும் இங்கு வழங்கி வைக்கப்பட்டன.
No comments:
Post a Comment