Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, February 28, 2012

ஈரான் இலங்கை்கு முழமையான ஆதரவு-சந்திப்பில் தெரிவிப்பு அமைச்சர் றிசாத் ஜெனீவாவிலிருந்து தெரிவிப்பு





இலங்கைக்கு எதிராக மேற்கத்திய வல்லரசுகள் சில முன்னெடுக்கும் செயற்பாடுகளை தோல்வியடையச் செய்ய ஈரான் எல்லா சந்தரப்பங்களிலும் இலங்கைக்கு உதவுமென ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அலி அக்பர் சலாஹி இலங்கை அமைச்சர்கள் குழுவினரிடம் தெரிவித்துள்ளதாக ஜெனீவா சென்றுள்ள இலங்கையின் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான ஜக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத்தினையடுத்து,அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,ரவூப் ஹக்கீம்,பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா ஆகியோர் ஈரான் வெளியுறவு அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.



இலங்கையும்-ஈரனும் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளாகும்,பல் துறைகளில் இரு நாடுகளும் மிகவும் நெரக்கமான செயற்பாடுகளை கொண்டதாக இருப்பதால்,அண்மைய இலங்கை நாட்டின் முன்னேற்றம் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக காண்ப்படுவதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சலாஹி,இக்குழுவினரிடம் எடுத்துரைத்துள்ளார்.
அதே வேளை இலங்கை அரசாங்கத்தின் தற்போதை முன்னேற்றம் பற்றியும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண மற்றும் வாழ்வாதார செயற்பாடுகள் உச்ச நிலையில் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்து அமைச்சர்கள் மேலும் விளக்கமளித்தாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.ஈரான் தமது ஆதரவையும்,தம்மோடு நெருக்கமாக செயற்படும்,ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகளிடமும்,இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை


வலுவிழக்கச் செய்யும் வகையில் செயற்படுவதற்கான தெளிவான விளக்கங்களையும் வழங்குவதாக வெளியுறவு அமைச்சர் சலாஹி பிரதி நிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
அதே வேளை சவுதி ஆரேபிய  அமைச்சரை இலங்கை அமைச்சர்கள் சந்தித்து இலங்கையின் நியாயங்களை எடுத்துரைத்ததுடன்,பேரவையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகள் இலங்கையின் பக்கம் ஆதரைவை வழங்க வேண்டிய காரணங்களை  தெளிவுபடுத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஜெனீவா பேரைவைக் கூட்டத்திற்கு வருகைத் தந்த தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் சுரபொங் டொவிசக்சைகுள் தமது ஆதரவு முழுமையாக இலங்கைக்கு வழங்கப்படும்த என்ற உறுதியினை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் வழங்கினார்.தாய்லாந்து பிரதமர் வின்லக் சினவத்ராவின் விசேட பணிப்புரையானது இலங்கைக்கு தமது ஆதரவை வழங்குவதாகும்.அதே வேளை கற்றறிந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் கூறியதை அவர் அங்கு நினைவுபடுத்தியதாக ஜெனீவாவிலிருந்து அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்

No comments:

Post a Comment