Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, March 2, 2012

மன்னார் தீ சம்பவம் குறித்து அமைச்சர் றிசாத் பொலீஸ் மா அதிபருடன் தொலைபேசியில் பேச்சு



மன்னார் நகர மையத்தில் உள்ள தினச் சந்தை மீது இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தின் பின்னணி குறித்து கண்டறியுமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் ,அமைச்சருமான றிசாத் பதியுதீன் பொலீஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெனீவா சென்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அந்த வேண்டுகோளைவிடுத்துள்ளார்.
மன்னார் நகரத்தில் தினச் சந்தையாக நடத்தப்பட்ட வந்த 66 கடைகளில் 35 கடைகள் நேற்று வியாழக்கிழமை அதிகாலை  தீயினால் முற்றாக எரியுண்ட நிலையில்,இதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன்,இத்தொழிலை நம்பி வாழ்ந்த 300 க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கும் நிலையில்,தொடர்ந்தும் அந்த வர்த்தகர்களுக்கு எதிராக  கட்டவிழ்த்து விடப்படும் ஆராஜகத்துக்கு இடம் கொடுக்காமல்,அதனது பின்னணி  குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளி எவராக இருந்தாலும்,தராதரங்களுக்கு அப்பால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
வடக்கில் தற்போது ஏற்பட்டுள்ள சுமூக நிலையினை குழப்பி மீண்டும் கலவரமான ஒரு சூழலை ஏற்படுத்த தொடர்ந்து சில சக்திகள் செயற்படுவதாகவும் பொலீஸ் மா அதிபரிடம் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் ,பிரதேசத்தில் அமைதி,சமாதானத்தை ஏற்படுத்தும் பணியில் பெலீஸாரினை ஈடுபடுத்துமாறும் கேட்டுள்ளார்

No comments:

Post a Comment