Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, March 23, 2013

இலங்கைக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்க நேரிடலாம்: அமெரிக்கா

இலங்கைக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்க நேரிடலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.


அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தத் தவறினால் சர்வதேச ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் ஆலோசனைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்hளர்.

புதிதாக நிறைவேற்றப்பட்ட தீமானத்தை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சொந்த நாட்டின் மக்களுக்கு உரிய முறைமையில் தமது கடமைகளை ஆற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானமானது இலங்கையின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவையே வெளிப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான தீர்மானமொன்றை நிறைவேற்ற நேரிடும் என இலங்கையை ஏற்கனவே அமெரிக்கா எச்சரித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment