இந்தியாவின் தமிழ்
நாட்டில் பட்டப்படிப்புக்கு சென்றிருந்த பௌத்த மாணவன் தாக்கப்பட்டமை,மற்றும் அண்மையில்
சுற்றுலா சென்றிருந்த சிங்களவர்கள் தாக்கப்பட்டமை என்பவைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில் இன்று கொழும்பில் அமைந்துள்ள இந்திய
உயர் ஸ்தானிகர் ஆலயத்துக்கு முன்பாக கண்டனப் பேரணியொன்று இடம் பெற்றது.
அனைத்து பல்களைலக்கழக
பௌத்த மாணவர்களின் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்த்து.
பேரணி அமைதியாக
இடம் பெற்றதுடன்,பேரணியில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்தி நின்றனர்.சிங்களம்,தமிழ்,ஆங்கிலம்
ஆகிய மும்மொழிகளிலும் இப்பதாகைகள் காணப்பட்டன.
அதே வேளை தங்களது
கோறிக்கைகளை இந்திய உயர் ஸ்தானிகரிடத்தில்
சமரப்பிக்கவும்,அவருடன் கலந்துரையாடவும் நேரம் ஒதுக்கித் தருமாறு கடமையில் இருந்த பொலீஸ்
அதிகாரி ஊடக வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது.
அதற்கமைய இந்திய
உயர் ஸ்தானிகரை தாங்கள் சந்தித்ததாக பேரணி எற்பாட்டளார் தம்புல்லாவே சந்தனந்த ரத்ன
தெரிவித்தார்.இந்த சந்திப்பில் இரு அரசாங்கங்களினது அரசியல் செயற்பாடுகளுக்காக அப்பாவிகள்
மீது அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது அங்கீகரிக்க முடியாது என்றும் இலங்கையில்
இருந்து செல்லும் மக்களையும்,யாத்திரிகர்கள்,மாணவர்ளையும் பாதுகாக்க இந்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்
விளக்கியதாக அவர் கூறினார்.
தங்களது கோறிகையினை
ஏற்றுக் கொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் உரிய நடவடிக்கையெடுப்பதாகவும் உறுதியளித்ததாகவும்
அவர் கூறியதாக எற்பாட்டளர் தெரிவித்தார்
No comments:
Post a Comment