அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின், பர்மிங்க்ஹாம்-ஷட்டில்ஸ்வொர்த்
சர்வதேச விமானநிலையத்தில், புதிய பகுதி ஒன்று கட்டிமுடிக்கப்பட்டு, மார்ச்
13ஆம் தேதி, பொதுமக்களின் உபயோகத்திற்காக திறந்துவிடப்பட்டது. அங்கு,
வாகனங்கள் நிறுத்தும் இடம், குழந்தைகள் விளையாடும் பகுதி, உணவிடங்கள்,
சாமான்கள் வைக்கும் அறைகள் போன்ற பல வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
விமானங்களின் விபரங்களைத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகைகளும் ஆங்காங்கே
தொங்கவிடப்பட்டிருந்தன.
நேற்று, 1.30 மணி அளவில்
பொதுமக்கள் கூடியிருக்கும் இடத்தில் தொங்கவிடப்பட்டிருந்த அறிவிப்புப் பலகை
ஒன்று அறுந்து விழுந்தது. அதனடியில் சிக்கிக்கொண்ட மக்கள் மீட்கப்பட்டு,
அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் லியுக்
ப்ரசெட் என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. யு
ஏ பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மற்றொருவரின் நிலைமை கவலைக்கிடமாக
உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விமான நிலைய நிர்வாகிகளுக்கு அந்தப் பலகை விழுந்ததன் காரணம் தெரியவில்லை.
No comments:
Post a Comment