Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, March 17, 2013

'பாடசாலை நேரங்களில் கையடக்க தொலைபேசிகளை கொண்டுவர வேண்டாம்'

பாடசாலை நேரங்களில் கையடக்க தொலைபேசிகளைக் கொண்டுவர வேண்டாம் என கல்குடா வலய கல்வி பணிப்பாளர் செ. ஸ்ரீ கிருஸ்ணராஜா கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கற்றல் கற்பித்தல் நேரங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளை உபயோகிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.


இதனாலேயே பாடசாலை நேரங்களில் கையடக்க தொலைபேசிகளைக் கொண்டுவர  வேண்டாம் என உத்தரவு பிறப்பிப்பதாக அர் தெரிவித்தார்.

வேல்ட் விஷன் நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு - கிரான் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள், பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

கிரான் உவெஸ்லி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"இந்த நவீன உலகிலே மாணவர்களைக் குழப்புகின்ற ஒரு விடயமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. குடும்பத்துடன் இருந்து கொண்டு தொலைக்காட்சி பார்ப்பதன் காரணமாக மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு கல்வியில் ஆர்வம் குறைவடைந்து செல்கின்றது.

தற்போது மாணவர்களில்  பலர் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிக்கின்றார்கள். இதனால் பல தீய விளைவுகள் ஏற்படுகின்றன. இனிமேல் கல்குடா கல்வி வலயத்திலே எந்தவொரு மாணவனும் கையடக்கத் தொலைபேசிகளை பாடசாலை வளாகத்தினுள் கொண்டு வரக் கூடாது. இந்த விடயத்தில் அதிபர்கள் ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அதேபோல் கடமை நேரத்தில் ஆசிரியர்களும் முன்மாதிரியாக இருந்து கையடக்கத் தொலைபேசி பாவிக்கக்கூடாது. கல்குடா வலயத்தில் கிட்டத்தட்ட 47 சதவீதமான மாணவர்களின் வரவு வீதம் குறைவாகக் காணப்டுகிறது. மாணவர்கள் விட்டு விட்டு பாடசாலைகளுக்குச் சமுகளிக்கிறார்கள். இடை விலகல் அதிகமாகக் காணப்டுகிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு எல்லோரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நிறுவனங்கள் பௌதிக வளங்களை வழங்குகின்றன. இந்த வாய்ப்பைச் செவ்வனே பயன்படுத்தி எதிர்காலத் தலைவர்களாகிய சிறார்களை கல்விமான்களாக உருவாக்குவது பெற்றோர்களதும் ஆசிரியர்களதும் சமூகத்தினதும் பொறுப்பாகும்" என்றார்.

இந்த நிகழ்வில் வேல்ட் விஷன் நிறுவனத்தின் கிரான் பிராந்திய கல்வித் திட்ட இணைப்பாளர் ப.ஜெகன் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி ந.குணலிங்கம் என பலர் கலந்துகொண்டனர். இத்திட்டத்தின் கீழ் 17 பாடசாலைகளை சேர்ந்த 528 மாணவர்களுக்கு பாதணிகளும் 5 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், 28 மேசைகள் மற்றும் கதிரைகள் மற்றும் 9 அலுமாரிகள் என 16 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment