Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, March 17, 2013

வடக்கில் காணிகள் கொள்ளையிடப்படவில்லை-செயலாளர் திவாரத்ன அறிக்கை



அரசின் பிரபல அமைச்சர் பாரிய காணிக் கொள்ளைஎன்ற தலைப்பில் லக்பிம செய்தித் தாளில் வெளியாகிய தலைப்புச் செய்தியூம் அது தொடர்பாக அதன் 6 ம் 20 ம் பக்கங்களில் உள்ள விடயங்களும் சம்பந்தமாக வட மாகாண மீள் குடியேற்றம் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பீ.திவாரத்னவினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.



அவ்வறிக்கையின் முழுமையான விபரம் பின்வருமாறு -
அச்செய்தியினால் இலக்கு வைக்கப்பட்டுள்ள அமைச்சரினன் மீது குற்றச் சாட்டுக்கள் பல சுமத்தப்பட்டுள்ளதனாலும் இன ரீதியின் அடிப்படையில் காட்டு நில அபகரிப்பு இடம் பெறுவதாகவூம் இடம் பெயர்ந்தோரை மீள் குடியேற்றுவது தொடர்பான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் காணி கோருவது வட மாகாணத்தில் முஸ்லிம் இன வலயமொன்றை உருவாக்குவதற்காகவே என்பன போன்ற விடயங்களினால் தோன்றக் கூடிய பொய்யான தகவல்களை திருத்துவதற்காக விடயங்களைத் தெளிவுபடுத்தல் அவசியம் என நான் நினைக்கின்றேன்.
1. வட மாகாண மக்களின் இடப் பெயர்வு   
வட மாகாணத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் ஆரம்பமான 1970 தசாப்தத்தின் இறுதிப் பாதி முதற் கொண்டு அம்மாகாண மக்கள் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்ல ஆரம்பித்தனரு. இன hPதியாக நோக்குமிடத்துஇ ஆரம்பம் முதற் கொண்டே சிங்கள மக்களையூம் 1990 ம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம் மக்களையூம் வட மாகாணத்திலிருந்து விரட்டியடிப்பதற்கு பயங்கரவாதிகள் எல்லா நடவடிக்கைகளையூம் மேற்கொண்டனர். அவ்வாறு இடம் பெயHந்தவHகளின் உடைமைகள் அனைத்தையூம் பயங்கரவாதிகள் அபகாpத்ததுடன்இ அவHகளுக்கு சொந்தமாயிருந்த காணிகள் பெரும்பாலானவற்றில் தமிழ் மக்கள் குடியேற்றப்பட்டனH. நலன்புரி முகாம்களில் தங்கி இருந்த மேற் கூறப்பட்ட இடம் பெயHந்தவர்களை மீள் குடியமHத்துவதற்கான ஒழுங்கான நடவடிக்கைகளை அரசு 2009 ம் ஆண்டு மேற்கொண்ட பின்னரே அம்மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செலவதற்குhpய வாய்ப்பு அவHகளுக்குக் கிட்டியது.
2. நலன்புரி முகாம்களில் தங்கி இருந்த இடம் பெயHந்தவர்களை மீள் குடியமர்த்தல்;
புலி பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த குடி மக்களை 2009 மே மாதம் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் அரச படைகள் மீட்டெடுத்த பின்னர் அவர்களுக்கு இருப்பிட வசதி செய்து கொடுப்பதற்காக போதிய நலன்புரி கிராமம் ஒன்று அரசாங்கத்தினால் நிறுவப்பட்டது.  2009 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை முடிவடையூம் நிலையில் அந்த நலன்புரி நிலையங்களுக்கு வந்து அவ்வாறு தங்கியிருந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 292000 ஆகும். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட மீள் குடியமHத்தும் நடவடிக்கையின் போது அரச நலன்புரி நிலையங்களில் உள்ளக இடம் பெயHந்தவHகளாகத் தங்கியிருந்த தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. பயங்கரவாதிகளின் பணிப்புரை விரட்டியடித்தல் ஆகிய செயல்களினால் சிங்கள முஸ்லிம் மக்கள் ஏலவே நீண்ட காலமாக இடம் பெயHந்து வாழ்ந்து வந்தமையினால் அந்த நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தவHகள் முற்று முழுதாக தமிழ் மக்களே. 2009 இலிருந்து 2012 வரை அவ்வாறு இடம் பெயHந்து வாழ்ந்த தமிழHகளைப் போன்றேஇ தமது வாழ்விடங்களிலிருந்து  இடம் பெயHந்து தத்தமது உற்றார் உறவினர் வீடுகளில் தங்கியிருந்த மற்றைய தமிழ் மக்களும் இந்த நடவடிக்கையின் போது தத்தமது சொந்த இடங்களில் மீள் குடியேறச் சென்றமையினால்இ 2012ம் ஆண்டு முடிவின் போது 142000 குடும்பங்களை மீள் குடியேற்றக் கூடியதாக இருந்தது. இக்காலப் பகுதியில் எல்லா வித்திலும் மீள் குடியேறியவர்களை கருதும் போது அவர்களில் 117.017 தமிழ் குடும்பங்களாக இருந்த போது முஸ்லிம் குடும்பங்கள் 22.134ம் சிங்களக் குடும்பங்கள் 4.913ம் ஆகும்.
மீள் குடியமர்த்தும் நடவடிக்கையின் போது மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்ட வேளையிலும் கூட ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உள்ளக காரியாலயம் மற்றும் உள்ளக வெளிநாட்டு அரச சார்பற்ற ஸ்தாபனங்களின் அளப்பரிய உதவிகள் கிடைக்கப் பெற்றது அந்த மக்கள் மீள் குடியமHத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே ஆகும்.
அம்மக்களின் சார்பாக உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் பாராட்டைப் பெற்றுக் கொள்ளும் அளவூக்கு நலன்புரி நிலையங்களை நடாத்துவதிலும் மீள் குடியேற்றத்தை ஆரம்பித்த வேளையிலும் அப்பணிகளுக்கு பொறுப்பான அமைச்சராக செயலாற்றியவர் கௌரவ றிஷாத் பதியூத்தீன் ஆவாH. இந்த பொறுப்புமிக்க தேசிய பணிகளை இன வேற்றுமைகள் எதுவமின்றி  வழுவற நிறைவேற்றுவதற்கு அவாpடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு மறக்கவொண்ணாது.
3. வட மாகாண முஸ்லிம்கள் இடம் பெயர்ந்தமை 
வட மாகாணத்திலிருந்து இடம் பெயHந்த முஸ்லிம்கள் தொடர்பான புள்ளி விபரங்கள்இ ஜனாதிபதி செயலணியின் கவனத்திற்கு ஆளானது. 1981 ம் ஆண்டின் குடிசன புள்ளி விபர அறிக்கையின் படி வட மாகாணத்தில் வாழ்ந்த மொத்த சனத் தொகையில் 4.6மூ முஸ்லிம்களாவர். யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த சத வீதம் 1.5ம்   முல்லைத்தீவூ வவூனியா மாவட்டங்களில் 5 சதமாக இருந்ததோடு மன்னார் மாவட்டத்தில் 26.09 ஆகவூம் இருந்தது. வடக்கில் பயங்கரவாத செயற்பாடுகள் தோற்றம் பெற்ற ஆரம்ப கட்டத்தில்இ முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம் பெறவில்லையெனினும்இ 1990ம் ஆண்டு எல்டீடீஈ இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீHமானமொன்றுக்கு அமையஇ வட மாகாணம் தமிழHகள் மட்டும் வாழும் பிரதேசமாக இருக்க வேண்டும் எனக் கொள்ளப்பட்டுஇ முஸ்லிம்கள் அனைவரும் 1990 அக்டோபர் மாதம் முடிவதற்கு முன்பதாக வட மாகாணத்தை விட்டு வெளியேற வேண்டுமென பணிக்கப்பட்டிருந்தது.
அப்படி வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் புத்தளம் மாவட்டத்திற்கும் ஏனையோர் அனுராதபுரம் குருனாகலை கொழும்பு ஆகிய வேறு பிரதேசங்களுக்கும் சென்றனர்.  1981 ம் ஆண்டின் குடிசன புள்ளி விபர அறிக்கையின் படி வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் சனத் தொகை 50,831 ஆகும். அந்த எண்ணிக்கையில் 27,717 பேர் மன்னார் மாவட்டத்தில் குடியிருந்துள்ளனர். 1990 இல் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 63,145 என்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித குடியிருப்பு ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் காணக்கிடைக்கின்றது.
மன்னார் மாவட்டத்தில் 1981ம் ஆண்டில் குடியிருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 27,117 ஆயினும்இ பின்னர் மீள் குடியேற்றப்படும் சந்தHப்பத்தில் மீள் குடியேற்றப்படுவதற்காக பிரதேச செயலாளH அலுவகங்களில் பதிவூ செய்யப்பட்டோhpன் எண்ணிக்கை 65531 ஆயிருந்தது. 1981ம் ஆண்டின் குடிசன புள்ளி விபர அறிக்கையின் படி வட மாகாணத்தில் முஸ்லிம் குடும்பமொன்றின் சராசாp அங்கத்தவா; தொகை 5.43 ஆகும். புத்தளம் அரச அதிபாpன் அறிக்கையின்படி வட மாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்து புத்தளத்திற்கு வந்த முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை 2009ம் ஆண்டில் 19,251 ஆகும். இந்த ஆகக் குறைந்த எண்ணிக்கையைக் கருதும் போது புத்தளத்தில் மாத்திரம் தங்கியிருந்த அந்தக் குடும்பங்களின் சனத் தொகை ஒரு இலட்சத்தை அண்மிப்பதோடு நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு குடியேறியவர்களின் எண்ணிக்கையை இதனோடு சோர்க்கும் போது இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
மக்களை மீள் குடியமர்த்தல்      
இடம் பெயர்ந்தோரை மீள் குடியமர்த்தலின் போது கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள்.
வட மாகாண மக்களை மீள் குடியமHத்துவற்கான ஜனாதிபதி செயலணியினால் கீழ் வரும் அடிப்படைக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டன.
1 -     மீள் குடியேறும் செயற்பாடு சுயமாக மேற்கொள்ளப்படுவதாக இருத்தல்.
2 -     உள்ளக இடம் பெயர்ந்தோரை மீள் குடியமர்த்துவது அவர்களது பூர்வீக   இடங்களிலாகும்.
3-     மீள் குடியேறும் செயற்பாடு கௌரவமானதும் பாதுகாப்பானதுமாயிருத்தல் வேண்டும்.
4-.     மீள் குடியமHத்தல் செயல்பாட்டில் இலங்கையின் பாதுகாப்புப் படைகள் பங்காளராக இருத்தல் வேண்டும்.
5-     மீள் குடியேறுவதற்கு முன்னர் தத்தமது சொந்த இடங்களை சென்று பார்வையிடத் தேவைப்படுபவர்களுக்கு அதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும்.
6 -     மீள் குடியேறுவதற்கு அவசியமான வாசிப்பிடங்களை நிர்மாணிப்பதற்கான வசதிகளையூம் சீவனோபாய நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு அவசியமான அடிப்படை வசதிகளையூம் செய்து கொடுத்தல்.

முஸ்லிம் மக்களை மீள் குடியமர்த்தல்      
மீள் குடியேற்ற செயற்பாட்டின் போது தலையாய பணியாக பொறுப்பாக்கப்பட்டிருந்தஇ நலன்புhp முகாம்களில் தங்கியருந்த தமிழ் மக்களை மீள் குடியேற்றுவதற்கு அவசியமான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரேஇ பல தசாப்த நீண்ட காலமாக இடம் பெயHந்து வாழ்ந்த சிங்கள முஸ்லிம் மக்களை மீள் குடியமHத்தல் தொடHபாக விசேட கவனம் செலுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டது.
2012 ஜுலை மாத முடிவின் போது வட மாகாணத்தின் மாவட்டங்கள் ஐந்திலும் குடியமHந்த முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை 22,134 ஆக இருந்ததாக பிரதேச செயலாளர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளதோடு அவற்றில் 15,321 குடும்பங்கள் மன்னார் மாவட்டத்திற்கே திரும்பி வந்துள்ளனர்.
இந்த மக்கள் மீள் குடியமர்வதற்காக தமது பூர்வீக வசிப்பிடங்களுக்கு திரும்பி வந்தாலும் அங்கு குடியமர்வதில் அவர்களுக்கு பெரும் தடைகள் பல தோன்றின. அதனால் அப்படி மன்னாரில் குடியமர்வதற்காக திரும்பி வந்த 15,321 குடும்பங்களில் அங்கு தமது சொந்த இடங்களில் நிரந்தரமாகக் குடியமர்ந்த குடும்பங்கள் 7,828 மட்டுமாக இருந்த வேலை, முல்லைத்தீவூ மாவட்டத்திற்கு திரும்பி வந்ததாக அறிவிக்கப்பட்ட 2,744 குடும்பங்களில், அங்கு தமது சொந்த இடங்களில் நிரந்தரமாகக் குடியமைர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 2,060  மட்டுமே என 2012 ம் ஆண்டு ஜுலை மாதம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி தொpய வந்ததோடு 2012ம் ஆண்டின் குடிசன புள்ளி விபரங்களின்படியூம் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு இந்த நிலை உருவாவதற்கு பிரதான காரணமாக விளங்குவது காணி சம்பந்தமான பிரச்சினையாகும்;. கற்ற பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்னிலையில் ஆஜராகிய சாட்சிகளின்படி ஆணைக் குழு இந்த பிரச்சினையை சார்யாக விளங்கிக் கொண்டதோடுஇ இந்த மக்களின் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவூம் ஆணைக் குழுவின் அறிக்கையில் 6.18 பந்தியில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
விசேடமாக மன்னார் மாவட்டத்தின் அமைவை நோக்கும் போது சமதரைப் பிரதேசமான மன்னார் பெருநிலத்தில் குடியிருப்பதற்குப் பொறுத்தமான மேட்டு நிலம் மிகவூம் அரிதாயிருப்பதோடு பெரும்பாலும் வயல் வெளிகளின் நடுவிலுள்ள சிறு மேட்டு நிலங்களிலேயே மக்கள் குடியிருக்கின்றன. ஆதலினால் அவர்களுடைய கிராமங்களை விஸ்தரிப்பதற்கு போதிய இடவசதி இல்லை. அப்படிச் செய்வதாக இருந்தால் அவர்களுடைய வயற் காணிகளை நிரப்ப வேண்டியேற்படும். சில பிரதேசங்களில் 1995ம் ஆண்டில் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களிலிருந்து எல்டீடீ பின் வாங்கி வரும்போது பலாத்காரமாகவோ அல்லது அவர்களின் விருப்பத்துடனோஇ அவர்களது கிராமங்களுக்கும் அயற் பிரதேசங்களுக்கும் அவர்களுடனேயே சென்று அதிக சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் அல்லது சிங்களவர்கள் கை விட்டுச் சென்ற காணிகளை மக்கள் மத்தியில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.. முஸ்லிம்களின் கிராமங்களை விஸ்தரிப்பதற்கு இருந்த இடங்களிலும் கூட அவர்களை குடியமHத்தியதினால், முஸ்லிம்கள் மீள் குடியேறுவதற்கும், தமது கிராமங்களை விஸ்தரிப்பதற்கு இருந்த இடங்களும் இல்லாமற் போய் விட்டன. வவூனியா மாவட்டத்திலும் இந்நிலையே உருவாகியூள்ளது. இந்த நிலைமை முஸ்லிம் மற்றும் சிங்கள இனங்கள் இரண்டையூமே ஒரே மாதிரியாக பாதிக்கும் விடயமாகும்.
ஜனாதிபதி செயலனி கற்ற பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவின் பாரிந்துரைகளையூம் கவனத்திற் கொண்டு முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினையை இனங்கண்டு அந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றை காணும் வகையில் இரண்டு வழி முறைகளைக் கையாண்டது.
1.             மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளாரின் தலைமையின் கீழ், காணி ஆணையாளர் நாயகம் வன பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம், வன விலங்கு பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி செயலனியின் பிரதிநிதிகள் ஆகியோர்களடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டு கிராமம் கிராமமாக தனித்தனியாக ஆய்வூ நடாத்தி அவர்கள் மீள் குடியமர்வதில் அதிக தாக்கம் செலுத்தும் இடப் பற்றாக்குறையின் தன்மையை ஆராய்ந்து, உசிதமான இடங்களை பாசீலனை செய்துரிந்துரைக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான அறிவூறுத்தல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இக்குழுவினால் இதுவரை மன்னாH மாவட்டம் தொடர்பில் மாத்திமே பரிசீலனை மேற்கொள்ளக் கூடியதாக இருந்துள்ளது. மேற் கூறிய குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு காணி அமைச்சு அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட காணிகளை மீண்டும் பரிசீலனை செய்து அதனடிப்படையில் ஏனைய மாவட்டங்களின் நிலைமைகளையூம் பரிசீலனை செய்வதற்கு விசேட குழு ஒன்றை நியமித்துள்ளது. அந்தக் குழுவின் விடய தானங்கள் பின் வருவனவாகும்.
(அ)
1  நிலையான கிராம உத்தியோகத்தர் பிரிவூகளின் ஒவ்வோர் இடங்களிலிருந்து இடம் பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் ஆற்களின் தொகையை கணக்கிடுதல்.
2.  2009ம் ஆண்டுக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் தத்தமது சொந்த   
                இடங்களுக்குத் திரும்பி  வந்து குடியமர்ந்த  குடும்பங்களையூம் ஆற்களையூம் அடையாளம் காணல்.

3.  மீள் குடியமர்வதற்காக வரக் காத்திருக்கும் எஞ்சியவர்களை அடையாளம் காணல்.
3(1). அந்தந்த கிராமங்களில் மீள் குடியேற்றத்திற்காக வருபவர்களுக்கு கொடுப்பதற்காக  தற்போது எஞ்சியிருக்கும் இடங்களை வீட்டுத் தோட்டம் செய்யக் கூடியமவூம் நீர்ப்பாசன வசதி கிடைக்கக் கூடியனவூம் மழை நீரினால் பயிர் செய்கை மேற்கொள்ளக் கூடியனவூமான விவசாய நிலங்களை அடையாளம் காணல்.
4- திரும்பி வந்துள்ள ஆனாலும் குடியமர்வதற்கு இடம் கிடைக்காத குடும்பங்களை    பட்டியல்   படுத்துதல்.
5- இடம் இல்லாமைக்கான காரணங்களை அந்தந்த வகைகளின் கீழ் அடையாளம் காணல்.
6 - வன பாதுகாப்பு மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு சரணாலயங்களைத் தவிHத்து எஞ்சியூள்ள அரசுக்கு சொந்தமான காணிகள் மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு உhpய காணிகளின் அளவை அளவீடு செய்தலும் அவ்வாறான இடங்களில் இடர்கள் ஏதுமின்றி மீள் குடியேற்றுவதற்குரிய குடும்பங்களின் எண்ணிக்கையை  அடையாளம் காணல்.
7 - எஞ்சியூள்ள குடும்பங்களை மீள் குடியேற்றுவதற்காக பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய வன பாதுகாப்பு மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு சரணாலயங்களின் காணிகளை கணக்கிடுதல்.
8- அவ்வாறு பெற்றுக் கொள்ளப்படுவதற்காக  அடையாளம் காணப்பட்ட காணிகளின் தற்போதைய நிலைமைகளைப் பற்றிய அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தல்.
9 - அந்தக் கிராமங்களிலுள்ள காணியற்றவர்களின் பிரச்சினைககள் மற்றும் சிக்கல்கள் தொடர்பாக    எடுக்கப்படப் கூடிய ஏனைய வழி வகைகள் எவையென பரிந்துரைத்தல்.
இதனடிப்படையில் மன்னாH மாவட்டத்தில் மாத்திரம் காணியற்ற 2,096 குடும்பங்களுக்கு 1080 ஏக்கர்  நிலம் பெற்றுக் கொடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 இதற்கிடையில் மேற்படி குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவாறு புத்தளம் மாவட்டத்திலிருந்து திரும்பி வரும் குடும்பங்களுக்கு அவசியமான முழுக் காணியளவையூம்இ மன்னார் வவூனியா மற்றும் முல்லைத்தீவூ ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் குடியிருந்த பிரதேசங்களிலிருந்தாயினும் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதனால் அதனை விடவூம் விசாலமான நிலம் அவசியப்படுவதாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளHகளிடமிருந்து வேண்டுகோள்கள் கிடைக்கப் பெற்றன. இது சம்பந்தமாக பல சுற்று பேச்சுவாHத்தைகளின் பிறகு அவ்வாறு அவசியப்பட்ட காணி அடையாளம் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்துஇ ஜனாதிபதி செயலணியினால்  முஸ்லிம் குடும்பங்கள் தொடர்பாக முல்லைத்தீவூ மன்னார் வவூனியா ஆகிய மாவட்டங்களின் அரச அதிபHகளுக்கு அறிவூறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய வன பாதுகாப்பு  மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகங்களின் கீழ் வரும் நிலங்களிலிருந்து காணிகளை விடுவித்துக் கொள்வதற்குத் தேவையான விண்ணப்பங்களை முறையாகத் தயாரித்து சூழல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு விண்ணப்பிக்குமாறு அறிவூறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு அது தொடர்பாக கடைப்பிடிக்கப்பட  வேண்டிய வழிமுறைகளையூம் காணி பெற்றுக் கொள்வதற்கு தகுதியூடைய மீள் குடியேறுபவர்களின் தகைமைகளையூம் இதற்காக இடம் பெயர்ந்த குடும்பங்களைத் தொரிவூ செய்வதற்கான முறையைப் பற்றியூம் எழுத்து மூலமான அறிவூறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரச அதிபHகளின்  வேண்டுகோள்களுக்கேற்ப சூழல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளாpன் அறிவூறுத்தலின்படி மேற் குறிப்பிடப்பட்ட முறையில் அடையாளம் காணப்பட்ட அரசாங்க காட்டு நிலங்களை வன பாதுகாப்பு பணிப்பாளH நாயகத்தினால் பிரதேச செயலாளாpடம் கையளிப்பதற்கான செயற்பாடுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது உண்மையாகும். அவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஏதாவது காணித் துண்டுஇ அரச சரணாலயத்துக்கு உட்படுமேயானால் அந்தக் காணியை பகிர்ந்ளிப்பதை நிராகாpப்பதற்கான அதிகாரத்தை வன பாதுகாப்பு பணிப்பாளH நாயகம் கொண்டுள்ளார். ஆகையினால் 2,388 ஏக்கர்  வன சரணாலய நிலம் ஆபத்துக்குள்ளாவதற்கு எந்த விதமான காரணங்களும் இல்லை.
காணி ஆணையாளர் நாயகத்தினால் மோதலுக்குப் பின்னரான காலப் பகுதியில் அரச காணிகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான துரித செயற் திட்டம்சம்பந்தமான 2013.01.31ம் திகதிய சுற்றறிக்கை அமைச்சரவை அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம் பெயHந்த குடும்பங்களை மீள் குடியமHத்துவற்கு வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் வரும் காணிகளைப் பயன்படுத்துவது சம்பந்தமாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பான உறுதியான அறிவூறுத்தல்கள் யாவற்றையூம் பிரதேச செயலாளHகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் காணி ஆணையாளH நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த சுற்றறிக்கையின் உறுப்புரைகளின் படி காணி அற்றௌருக்கு காணி பகிHந்தளித்தல் தமது காணியை இழந்தவர்களுக்கு காணி பகிர்ந்தளித்தல் ஆகிய  இரு முறைமைகளும் சம்பந்தமாக செயற்பட வேண்டிய ஒழுங்கு முறை சம்பந்தமாக அறிவூறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புரைகளுக்கு ஏற்ப செயற்படுவதற்கு எல்லா அதிகாரிகளும் கடப்பாடுடையவர்களாவர். இந்த விடயங்களை கருத்திற் கொள்ளும் போது முன்னர் கூறப்பட்ட செய்தி அறிக்கையில் எடுத்தாளப்பட்டுள்ள காணி அபகாpப்பு என்பது ஓரு போதும் இடம் பெறாது என்பது ஞாபகமூட்டத் தக்கதாகும். வடக்கிலிருந்து இடம் பெயHந்த தமிழHகளில் சுமாH 95மூ மீளக் குடியமHத்தப்பட்டுள்ள அதே வேளை 8.000 குடும்பங்கள் அளவில் முஸ்லிம்களும்இ ஏறக்குறைய 1.500 சிங்ளவHகளும் இன்னும் மீள் குடியமHத்தப்படுவதற்கு மிகுதியாக உள்ளனH. இந்த நடிவடிக்கைகளை பூர்த்தி செயவதற்காக விசேடமாக முஸ்லிம் மக்களை மீள் குடியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள பிரதான முட்டுக்கட்டையாக விளங்கும் காணிப் பிரச்சினையை தீHப்பதற்காக அரசாங்கம்  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அது கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டியதாயிருப்பதோடுஇ காணியற்ற இடம் பெயHந்தோருக்கு அரச காணிகளை பகிர்ந்தளிப்பதைத் தவிர வேறு மாற்று வழி ஒன்றும் இல்லை. வட மாகாணம் எல்டீடீஈ யின் கட்டுப்பாட்டில் இருந்த போது அம்மாகாணத்தில் அரச காணிகள் எந்தவித கேள்வி கணக்கிpன்றிஇ அவHகளுடைய இஷ்டப்படி வழங்கப்பட்ட விதம் பற்றி அப்போது பேசப்படவில்லை. இன்றும் அது பற்றி பேசப்படுவதில்லை. அரச காணிகளின் பாpபாலனம் சம்பந்தமான எல்லா நியதிகளும்இ அரச அதிகாhpகள் அறிந்து கொண்டே மீற்ப்பட்டுள்ளன. இந்நிலைமை 2009ம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கையின் பின்னரும் கூட வட மாகாணத்தில் இடம் பெறவில்லை எனக் கூற முடியாது. ஆனாலும் அத பற்றி எவரும் பேசவில்லை.
மேல் குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்படும் காணி பகிர்ந்தளிப்பு மேற்கொள்ளப்படுவது இடம் பெயர்ந்தஇ காணியற்ற பெரும் எண்ணிக்கையான மக்களை மீள் குடியமர்த்துவதற்காகவே. அந்த நடவடிக்கையை உhpய முறையில் செயல்படுத்துவது தொடர்பாக வட மாகாணத்தில் காணி பாpபாலனம் சம்பந்தமாக கடைப்பிடிக்க வேண்டிய சட்ட ரீதியான செயற்பாடுகள் பற்றி அண்மையில் வெளியிடப்பட்ட மேற் கூறிய சுற்றறிக்கையில் முதற் தடவையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2.             இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பதாக காணி பகிர்ந்தளிப்பது தொடர்பில் மக்கள் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விசேட ஏற்பாடுகள் எதுவூம் இல்லாத நிலையில் இந்திய வீடமைப்பு உதவித் திட்டத்திற்காக சமயோசிதமிக்க தீர்மானங்களை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலணி ஏற்பாடுகளை மேற்கொண்டது.
வட மாகாணத்திற்கான இந்திய வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழான  மொத்த வீடுகளில் 7.500 வீடுகள் ஒதுக்கப்பட்டது மன்னார் மாவட்டத்திற்கேயாகும். இடம் பெயர்ந்து மீண்டும் குடியேற வந்தவர்களுக்கு மட்டுமே இந்த வீடுகள் வழங்கப்படவூள்ளதோடு அதன்படி இடம் பெயர்ந்தோரில் அதிகமானோர் முஸ்லிம்களாக இருப்பதனால் ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் கூடுதலானவை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்படலாம். வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான அடிப்படை தகைமையாகக் கொள்ளப்படுவது மீள் குடியமர்ந்தவர்கள் தமது சொந்தக் காணிகளில் குடியிருப்பதாகும். முஸ்லிம்களில் அதிகமானோர் தமது சொந்த இடங்களில் வசித்து வந்திருந்த போதிலும் நீண்ட காலமாக தமது பூர்வீக இடங்களில் குடியிருக்க முடியாமையினாலும் பயங்கரவாதிகளின் திடீர் அறிவித்தலினால் தமது இருப்பிடங்களை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டு நீண்ட காலமாக திரும்பி வர முடியாமற் போனமையினாலும்இ அவHகளில் பெரும்பான்மையோரிடம் தமது இடங்களின் உரித்துரிமையை நிரூபிப்பதற்கு அவசியமான ஆவணங்கள் எவையூம் எஞ்சியிருக்கவில்லை. 1990 – 1995ம் ஆண்டு காலப் பகுதியில் நாட்டில் அமுல் படுத்தப்பட்ட அனுமதியற்ற காணிகளை ஒழுங்கு முறைப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது அவர்கள் தமது சொந்த ஊர்களில் குடியிருக்கவில்லை. எனவே அந்த உரிமைமை முஸ்லிம்களுக்கு கை நழுவிப் போய் விட்டது. அதிலும் அவர்களுக்கு மிக மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ்இ அந்த மக்கள்இ தமது பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டோரும் அவHகளுடைய குடும்பத்தவHகளும்இ அவHகள் திரும்பி வந்து தமது இடங்களில் குடியிருத்தல் அந்த இடங்களுக்கு வேறெவரும் உரிமை கோராதிருத்தல் ஆகிய அடிப்படை விடயங்களின் கீழ் அவர்கள் குடியிருக்கும் இடங்களுக்கு  அவர்களுக்கு உரித்துரிமை இருக்கும் பட்சத்தில் அதனை உறுதிப்படுத்தும் கடிதங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு அறிவூறுத்தல் வழங்கப்பட்டதுடன் அந்த உறுதிப்படுத்தும் கடிதங்களை அவர்களுடைய இடத்துக்குரிய உரிமையை ஊர்ஜிதப்படுத்தும் ஆவணங்களாகக் கருதி அவர்களுக்கு வீடு வழங்கப்படும் போது காரியமாற்றுமாறு ஜனாதிபதி செயலணியினால் அறிவூறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காணி ஆணையாளர் நாயகத்தின் அறிவூறுத்தல்களின்படி செயற்பட வேண்டியூள்ளதால் மேற்படி காணி தொடர்பாக இவர்களுக்கு சட்ட ரீதியான அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகையில்  காணி ஆணையாளாரிள் சுற்றறிக்கைகளில் உள்ள ஏற்பாடுகளின்படியே செயற்பட வேண்டியூள்ளது.
இந்த முறைப்படி சட்ட ரீதியாக கடைப் பிடிக்கப்படும் முறைமையான செயற் திட்டத்தின் அடியொற்றி வட மாகாணளத்தில் மீள் குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்களின் காணி சம்பந்தமான மனிதாபிமான பிரச்சினை தொடர்பாக உசிதமான நடிவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் முன் கூறப்பட்ட செய்தியில் முன் வைக்கப்பட்டுள்ள விடயங்களின் ஊடாக கௌரவ அமைச்சர் பற்றிய தவறான கருத்து மக்கள் மத்தியில் உருவாகக் கூடியதாக இருப்பதனால் அந்நிலையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது உசிதமானதென பாpந்துரை செய்ய விரும்புகின்றேன்.

No comments:

Post a Comment