சர்வதேச விசாரணகளுக்கு இணங்குமாறு இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்
சர்வதேச விசாரணகளுக்கு இணங்குமாறு இலங்கையை இந்தியா
வலியுறுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுத்தக்
குற்றச் செயல்கள் தொடர்பில் உயர் மட்ட சர்வதேச சுயாதீன விசாரணைகள்
நடத்தப்பட வேண்டியது அவசியமானது என இலங்கையை, மத்திய அரசாங்கம் வலியுறுத்த
வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்களுக்கு
நியாயமான அதிகாரப் பகிர்வினை வழங்கி காத்திரமான அரசியல் தீர்வுத்
திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென கட்சி கோரியுள்ளது.
அப்பாவி பொதுமக்கள் மீது யுத்தக்குற்ற செயல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கான போதியளவு சாட்சியங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
No comments:
Post a Comment