Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, March 17, 2013

40 எம்பிக்களின் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்! மாணவர் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக 40 எம்.பி.க்களின் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
போராட்டம் தீவிரம்
இலங்கைக்கு எதிராக ஐ.நா சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.


இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சுயநிர்ணய கொள்கையை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்றனர். இலங்கை அரசை கண்டித்து வரும் 20–ந் தேதி தமிழகம் முழுவதும் 1 கோடி மாணவ–மாணவிகள் தொடர் முழக்க போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
எம்.பி.க்கள் அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரவீன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்.
இதுகுறித்து தமிழகம்–புதுச்சேரியில் உள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த 40 எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
எனவே அந்த 40 எம்.பிக்களின் அலுவலகங்கள் முன்பு மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நடைபெறும் தீர்மானம் தாக்கலாகும் 21–ந் தேதி இந்த முற்றுகை நடைபெறும். இவ்வாறு பிரவீன் கூறினார்.

No comments:

Post a Comment