பொதுபல சேனா அரைகுறை பௌத்தர்களைக் கொண்ட அமைப்பாகும். இந்த அடிப்படைவாத
அமைப்பு இன்னும் ஓரிரு போயா தினங்களுக்குள் அழிந்து விடப்போகின்றது' என
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பலக்லைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும்,
தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையத்தின் தலைவருமான பேராசிரியர் தம்ம அமில
தேரோ தெரிவித்தார்.
'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் தலைப்பில தேசிய ஐக்கிய முன்னணி நேற்று கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடத்திய கருத்துக்களம் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆசாத்சாலி தலைமையில் இக்கருத்துக்களம் நடைபெற்றது.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பேராசிரியர் தம்ம அமில தேரோ,
'பொதுபல சேனாவை நினைத்து எந்தவொரு முஸ்லிமும் கவலைப்படவோ, அச்சப்படவோ வேண்டிய அவசியமில்லை. இந்த இலங்கை நாடு அனைத்து மக்களின் நாடாகும். இதுதனியே பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. இங்கு வாழும் அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான ஒரு நாடாகும்.
பௌத்த தர்மமானது பிரிவினை வாதத்தையோ மதவாதத்தையோ போதிக்கும் ஒரு மதமல்ல. பௌத்தம் இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும், சமாதானத்தையும் வலியுறுத்தி கூறுகின்றது.
இந்த நாட்டில் இன ஒற்றுமையை பேணுவதற்கும், சகோதரத்துவத்தை கட்டியெழுப்பவதற்கும் அனைத்து மத தலைவர்களும், சிவில் அமைப்புக்களும் அரசியல் தலைவர்களும் ஓரணியில் திரளவேண்டும்,
பௌத்த மதத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது. கடந்த காலங்களில் பௌத்தத்துக்கு எதிராக பல்வேறு சக்திகள் முளைத்தன. ஆனால் எதுவும் செய்துவிடவில்லை. பௌத்தத்துக்கு ஆபத்து வந்துவிட்டது என்ற மாயையான கருத்துக்களில் இருந்து விடுபடுமாறும் சந்தேகங்களை களையுமாறும் அனைத்து சிங்கள மக்களிடத்திலும் கேட்டுகொள்கின்றேன்.
உண்மையான பௌத்தர்களிடம் பிரிவினை வாதமோ மதவாதமோ கிடையாது. நான் உண்மையான ஒரு பௌத்தன், அரை குறை பௌத்தர்களாலேயே இந்த பிரிவினைவாதம் தூண்டப்படுகின்றது.
தமிழர்களையும், முஸ்லிம்களையும் தாக்குவதும் அரச காணிகளை தனியாருக்கு விற்பணை செய்வதும், ஜனநாயகம் மறுக்கப்படுவதுமே ஹராம். இதற்கு மாற்றமானவை ஹலாலாக பார்க்கவேண்டும்.
சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வரலாற்று ரீதியான உறவு பேணப்பட்டு வருகின்றது. இந்த உறவினை நாம் சீரழிப்பதற்கு இடமளிக்க கூடாது' என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment