இலங்கையில்
இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் இன்று
திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து
வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட முதலாவது உத்தியோகபூர்வ விமானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்று முன்னர் வந்திறங்கினார்.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்றின் மூலம் ஜனாதிபதி மத்தல
விமான
நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment