Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, March 18, 2013

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கனடா கலந்து கொள்ளும் - ஹியூ சீகல்

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் கனடா கலந்து கொள்ளும் என இலங்கை தொடர்பான விடயங்களை தேடுவதற்காக இன்று (18) இலங்கைக்கு விஜயம் செய்யும் பொதுநலவாய அமைப்பு நியமித்துள்ள விசேட தூதுவரான செனட் உறுப்பினர் ஹியூ சீகல் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தினத்தை அனுஷ்டிப்பதற்காக சென்றிருந்த அவர், இலங்கை பத்திரிகை ஒன்றுடன் நடந்த சந்திப்பின் போது இதனை கூறியுள்ளார். இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை பகிஷ்கரிக்க போவதாக கனடா எப்போதுமே கூறவில்லை எனவும் சீகல் கூறியுள்ளார்.

எனினும் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் இரண்டு தரப்பினராலும் போர் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கை சுட்டிக்காட்டி பின்னர்,பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஆர்பர் கூறியதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். எனினும் மாநாட்டில் வேறு அதிகாரிகள் குழு கலந்து கொள்ளும் எனவும் சீகல் தெரிவித்துள்ளார்.

தான் இன்று இலங்கை விஜயம் மேற்கொள்வது இலங்கை நண்பன் என்ற திறந்த மனதுடனேயே எனவும் போருக்கு பின்னர், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்டு, அது குறித்து கனேடிய அரசாங்கத்திற்கு அறிக்கையிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களின் செயற்குழு கூட்டத்தின் இலங்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டாலும் அது மாநாடு இலங்கையில் நடைபெற தடையாக அமையது. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரதமர் நீதியரசர் தொடர்பான விடயத்தை அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துரையாடுமாறு கனடா கோரிக்கை விடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு கனடாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு எனவும் அந்த அமைப்புக்கு நிதி சேகரித்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத்தை இலங்கையில் இருந்து ஒழித்தமை குறித்து இலங்கை அரசுக்கு தாம் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்வதாகவும் சீகல் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment