Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, March 17, 2013

மே மாதம் இலங்கை வருகிறார் நவீபிள்ளை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் மே மாதத்தில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்கு முன்னர் இரு தடவைகள் பிற்போடப்பட்ட நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம், இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தின் நடைமுறைகள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடும் வகையிலேயே அமையப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு எதிராக பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில், இலங்கையின் நிலைமை குறித்து நேரில் வந்து பார்வையிடுமாறு நவநீதம்பிள்ளையிடம் இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment